Monday, October 26, 2015

என்னுடன் சில நொடிகள்.....

TAMILSJKT
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் அறிந்து, அனைத்தும் கொண்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு வலைமனை இருப்பதாக அறியவில்லை. எனவே, இந்த வலைமனையை மேலும் மெருகுபடுத்த உங்கள் ஆலோசனையும் வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. இந்த வலைமனையில் இன்னும் எவற்றைப் புகுத்தலாம் என நீங்கள்தாம் கூற வேண்டும்.
இப்பக்கத்தை 20,000 மேற்பட்டோர் வலம் வந்திருக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததாகத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் வருந்தவுமில்லை. இந்த வலைமனையைப் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால், அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். தங்களிடமிருந்து ஆரோக்கியமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.

அன்புடன்,
முனியாண்டி ராஜ்.

Tuesday, October 20, 2015

தமிழ் மொழி 036 மற்றும் 037 க்கான வழிகாட்டி இங்கே BAHASA TAMIL 2016  என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அடுத்தாண்டு தேர்வுக்கான தமிழ் மொழி தாள் எவ்வாறு அமையுமென இதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.  இக்குறிப்பைப் பற்றி ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
TAMILSJKT

Sunday, October 11, 2015

யு.பி.எஸ்.ஆர்., புதிய வடிவமைப்புப் பற்றிய விவரங்களை விரைவில் இனிமேல் பதிவு செய்வேன். அண்மையில், புதிய வடிவத்திற்கான தலைமைப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளுக்கும் சென்று வந்தேன். இன்னும், மாநில மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. அதன்பின், அது தொடர்பான விளக்கங்களையும் மாதிரித் தாள்களையும் இங்கே பதிவேற்றுவேன். 

Sunday, August 30, 2015

தமிழ் மொழி தேர்வுக்களம் 2015 பட்டறை

இன்று, 30.8.2015 (ஞாயிறு) பெட்டாலிங் வட்டார (champions proggramme) தமிழ்ப்பள்ளிகளுக்கான தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பட்டறையை வழி நடத்தினேன். ஏறக்குறைய 100 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி இலாகா ஏற்பாடு செய்திருந்த இப்பட்டறையில் தேர்வுத்தாளை அணுகும் வழிமுறைகள், மாணவர்கள் செய்யும் தவறுகள், சிறந்த கதை, சிறுகதைக்கான கூறுகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டன. நினைவுக்காக ............