Tuesday, August 30, 2016

TAMILSJKT
வணக்கம். இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சிறந்த அடைவுநிலை பெற வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வலைப்பூங்காவழி, தமிழ்மொழி தொடர்பாக நானும் சிறு பங்களித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என் வலைப்பூவை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1000 பேர் உலா வருகின்றனர். இதிலிருந்து, இவ்வலைப்பூங்கா அவர்களுக்கு எந்த அளவு உதவியிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். என் வலைப்பூவிலிருந்து பெரும்பாலான கோப்புகளை நேரடியாகத் தருவிக்க முடியவில்லையென்றும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கிறது என சிலர் வருத்தம் தெரிவித்தனர். எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு. தமிழ்மொழி திறமிகு ஆசிரியர் என்ற முறையில் கணக்கெடுப்பு எனக்குத் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில் என் வலைப்பூவை மேலும் மெருகேற்ற எண்ணம் கொண்டுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. சரி, தமிழ்மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதாவது இறுதிநேர அறிவுரை....
மாணவர்களே, உங்கள் ஆசிரியர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேளுங்கள். அவர்களைவிட உங்களை அதிகம் தெரிந்தவர்கள் இலர். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.

Monday, August 29, 2016

வாழ்த்துகள்

TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தேர்வு எழுத மாணவர்கள் அனைவரும் தயாராக இருப்பர் என்பது உறுதி.  இது தமிழ்மொழிக்கான தளம் என்பதால் அதைப் பற்றியே பேச விரும்புகிறேன்.
தமிழ்மொழி தாள் 1, தாள் 2 என்று இரண்டு தாள்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.

இத்தளத்தின் வாயிலாக நான் வழங்கிய பயிற்சிகள், வழிகாட்டல்கள் அனைத்தும் உங்களுக்குப் பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதஙியாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விடயங்களை உங்கள் முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.

1. தேர்வை நம்பிக்கையோடு அணுகுங்கள்.
2. கேள்விகளைக் கவனமாகப் படித்து பதில் அளியுங்கள். அவசரம் 
    வேண்டாம்.
3.