Wednesday, July 29, 2015

இங்குப் பதிவேற்றப்படும் மாதிரிக் கட்டுரைகளையோ  வினாத்தாள்களையோ அல்லது மற்ற போதினிகளையோ பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா ......

கொடுக்கப்பட்டிருக்கும்  மின்னஞ்சல் வழி  தொடர்பு கொள்க..

நன்றி.

***** சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

Saturday, July 25, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று 25.07.2015, காலை 8.00 முதல் 10.00 வரை கோல லங்காட் வட்டாரத்தில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கும் மாலை 2.30 முதல் 4.30 வரை STAR நாளிதழ் கோலாலம்பூர், சிலாங்கூர் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கும் தமிழ் மொழி வழிகாட்டிப் பட்டறையை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.





கோல லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த 12 ப்ள்ளிகளில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்ட வழிகாட்டிக் கருத்தரங்கு





The STAR நாளிதழின் ஏற்பாட்டில் Menara STAR இல் நடத்தப்பட்ட வழிகாட்டிக் கருத்தரங்கில் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Wednesday, July 22, 2015

யு.பி.எஸ்.ஆர்., 2015 மீள்பார்வை தொகுப்பு 01
இவ்வாண்டுக்கான யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை தொகுப்புடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். இவ்வாண்டு நான் யு.பி.எஸ்.ஆர்., பட்டறைக்குச் சென்ற பள்ளிகளுக்கு 'சிறப்புத் தொகுப்பு' மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
இங்குப் பதிவேற்றபடும் தொகுப்பு அடிப்படை மீள்பார்வை பயிற்சிகளே!

நன்றி.

'

Tuesday, July 21, 2015

தன்கதை, கற்பனைக் கட்டுரை

தன்கதையும் கற்பனைக் கட்டுரையும் திறந்த முடிவு கட்டுரை வகையைச் சார்ந்தவை என்பதை அறிந்து கொள்க!
ஒரு கட்டுரையின் கூறுகள் :
அ. முன்னுரை
ஆ. கருத்து
இ. முடிவுரை

அ. முன்னுரை என்பது என்ன ?
   - ஒரு தலைப்பின் அறிமுகம் தான் முன்னுரை. தலைப்பபைப் பற்றி    
     முன்னரே அறிமுகப்படுத்த  வேண்டும்.
- தன்கதையிலும் கற்பனைக் கட்டுரையிலும் அதுவே நிகழ வேண்டும்.
   ஆனால், என்ன நடக்கிறது ?
  ** கற்பனைக் கட்டுரையையும் தன்கதையையும் கதை போன்று எழுதலாம்
      என்று ஒரு தவறான போதனை மாணவர்களிடையே பரப்பப்பட்டு
     வருகிறது. மாணவர்களும் இதுவே சரியென  எண்ணி எழுதுகின்றனர். இது
     தவறான வழிகாட்டலாகும்.
 ** கற்பனைக் கட்டுரையோ தன்கதையோ.... அது கட்டுரை என மாணவர்கள்
     உணர வேண்டும்.  உணர வைக்கப்பட வேண்டும்.  அதற்குக் தேவை  
     முன்னுரையே அன்றி, கதை போன்ற தொடக்கமல்ல.

ஆ. கருத்து - 4 கருத்துகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கருத்தும் முறையாக
                         விளக்கப்பட வேண்டும்.


இ. முடிவுரை - கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றவாறு முடித்து வைக்கப்பட
                               வேண்டும்.

    ****### விரைவில் ஒரு மாதிரிக் கட்டுரையுடன் தங்களைச் சந்திக்கிறேன்.

நான் ஓட்ட விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி

முன்னுரை:
- இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி - விண, மண், நீர் என பலவித
   வாகனங்கள்
- நான் உருவாக்க விரும்புவதோ ஒரு விநோதமான மிதிவண்டி

கருத்து 1 ;
- அமைப்பு -  வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
- எதனால் செய்யப்பட்டிருக்கும் - கண்ணாடி நுண்ணிழைகள்
- ஏன் - உறுதியாகவும் இலகுவாகவும் இருக்கும்
-  இதர அமைப்புகள்

கருத்து 2 ;
- பறக்கும்  - ஏன் பறக்க வேண்டும் ?
- இன்றைய கால கட்டத்தில் சாலை நெரிசல் - பெரும் சவால்
- போக வேண்டிய இடத்திற்குத் துரித நேரத்தில் செல்ல முடிவதில்லை
- பயன் - என்ன பயன் என விளக்கப்பட அல்லது கூறப்பட வேண்டும்
- நேரம் மிச்சமாகும்

கருத்து 3:
 - உருமாறும் தன்மை கொண்டிருக்கும் 
- ஏன் உருமாறும் தன்மை கொண்டிருக்க வேண்டும் ?
- இன்றைய காலத்தில் திருடு, கொலை, கொள்ளை, கடத்தல் - வாழ்க்கை 
  பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
- ஓர் இயந்திர மனிதனாக உருமாறி எனக்கு மெய்க்காப்பளனாக இருக்கும்
- என்ன நன்மை ?
- நானும் என் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்போம்.

கருத்து 4;
- எந்தச் சூழலிலும் பயணம் செய்யும்
- வெள்ளம், சுனாமி, பூகம்பம், தீ விபத்து  ---
- காரணம் - ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற இயலும்
- எனக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் தொண்டாற்ற 
   முடியும்.

முடிவுரை
- இது விநோத ஆசையாக இருந்தாலும், நிறைவேறும் என்ற நம்பிக்கை
   இருக்கிறது.
- கணித, அறிவியல் பாடங்களில் கருத்தூன்றி படித்து - 
- இறைவன் அருளும் தன்னம்பிக்கையும் - துணை நிற்கும்.



குறிப்பு :
இது எதிர்காலச் சூழலை மையமாக்கி எழுதப்பட வேண்டிய கட்டுரை.
எனவே, இது முழுக்க முழுக்க எதிர்காலச் சூழலில் அமைய வேண்டும்.
'உம்' என்ற விகுதியில் எழுத வேண்டும்.

Saturday, July 11, 2015

யு.பி.எஸ்.ஆர்., பயிற்சிப் பட்டறை




இன்று பகாங், திரியாங் பட்டணத்திற்கு அருகில் உள்ள மெந்தரி தமிழ்ப்பள்ளியில் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யு.பி.எஸ்.ஆர்., பயிற்சிபட்டறை நடத்தினேன். வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற கூறுகளில் தேர்வுக் கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது என்ற பட்டறையில் பெரா வட்டாரத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் ஈடுபாடு மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது.