Sunday, June 25, 2017

சூரியன் மேயும் சமவெளிகள்

TAMILSJKT

அன்புசால் நண்பர்களுக்கு,


என் முதல் கவிதைத் தொகுப்பான சூரியன் மேயும் சமவெளிகள் என்னும் கவிதைத் தொகுப்பு வரும்

29.07.2017 சனிக்கிழமை,
கோலாலம்பூர் டான்சிரி சோமா, துன் சம்பந்தன் அரங்கத்தில்
பிற்பகல் 1.00 மணி 

தொடங்கி நடைபெறும் என்பதனை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ் ஆர்வலர்கள் தவறாது இந்நிகழ்வில் கலந்து ஆதரவு தருமாறு அன்புடன் விழைகிறேன்.

நன்றி.

யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டம்... மீள்பார்வை பயிற்சிகள்

TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டம் 2017

யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை பயிற்சிகள் விரைவில். யு.பி.எஸ்.ஆர்., 2017 ஐ ஒட்டி மீள்பார்வை தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இது வலைப்பூவில் பதிய்ப்படாது. தேவைப்படும் பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்களுடன் அனுப்பினால், மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். நன்றி.

பெயர்                                     :
பள்ளி                                      :
மின்னஞ்சல் முகவரி       :

இத்தொகுப்பில் அடங்கியிருப்பவை

அ. தமிழ்மொழி கருத்துணர்தல் - பிரிவு அ ( கேள்விகள் 1 - 20 )
ஆ. தமிழ்மொழி கருத்துணர்தல் - பிரிவு ஆ ( கேள்விகள் 21 - 25 )

இ. வாக்கியம் அமைத்தல் 
ஈ.  சிறுகதை எழுதுதல்
உ. கட்டுரை - தேர்ந்தெடுத்த 6 தலைப்புகளில் 
                             - திறந்த முடிவு - 3
                             - அமைப்புக் கட்டுரை

குறிப்பு : என்னுடன் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்த பள்ளிகளுக்கே
                  முதலிடம்.

Tuesday, May 2, 2017

கலைச்சொற்கள்

TAMILSJKT
கலைச்சொற்பட்டியல்👇�

Breakfast> பசியாறல்
Lunch> பகலுணவு
Supper> இரவுணவு
Dinner> விருந்து
Meals> உணவு/ அடுகை
Cocktail> மென்பருகம்
Cooking>சமையல்
Cook> சமையல்காரர்/ அடுவர்
Cookery> அடுகலை
Catering> இடுகலை/ எடுப்புணவு
Buffet> கூட்டுப்படையல்
Drink> பருகம்
Beverage> அருந்தம்
Dessert> ஈற்றுணா
Light refreshment> இலகு தெம்புண்டி/ அல்கு தெம்புண்டி
Menu> உணவு வகை
Card> உணா அட்டை
Pudding> அவியுணா
Preserves> தொடுவுணா/ தொடுவ
Server> இடுநர்/ படையலர்/ ஊழியர்
Self service> தன்னூழியம்/ தன் படையல்
Boiler> சூட்டுக்கலம்
Stove>அடுப்பு
Gas cylinder> வளித் தோம்பு
Heater> அனலி/ காய்ச்சி
Crater> பொடிச்சீவி
Kettle> கெண்டி
Mincer> பொடிப்பான்
Mug> முகவை
Peeler> உரிவை
Pressure cooker> அழுத்த அடுகலன்
Rolling pin> அடை உருளை
Siever> சலிப்பான்
Strainer> வடிகட்டி
Plate> தட்டு
Platter> தட்டம்
Tray> தாங்கு தட்டம்
Tumbler> குவளை
Sweet> இனிப்பு
Savouries> காரங்கள்
Fruit salad> பழக்கூட்டு
Vegetable juice> பயிரஞ்சாறு
Rose Milk> செம்பனிப்பால்
Straw> உறிகுழல்/ உறிஞ்சி
Soup> வெஞ்சாறு/ சூப்பு
( சூப்பல் ...> சூப்பு)
Badam kheer> வாதுமைக்கன்னல்
Ice> பனி
Ice cream> பனிக்குழை/ பனிக்கூழ்/ பனிகம்
Cube ice> சிமிழ் பனிகம்
Cone ice> கூம்புப் பனிகம்
Stick ice> குச்சிப் பனிகம்
Ice fruit> பனிக்குழல்
Special dosai> தனியன் தோசை/ சிறப்புத் தோசை
Paper dosai>  தாள் தோசை/ முறுவல் தோசை
Plain dosai> பொதுவன் தோசை/ வெறுந்தோசை
Masala dosai > உசிலைத் தோசை
Parotta> வல்லடை
Kuruma> குழவு
Kesari> இன் கிளறி
Briyani> புலால் சோறு/ கறிச்சோறு
Omelette> முட்டையடை/ பொறித்த முட்டை
Half boil> அரைவேக்காடு
மூன்று குழந்தைகள்> மும்மையர்

நான்கு குழந்தைகள்> நான்மையர்

ஐந்து குழந்தைகள்> ஐம்மையர்

Three star hotel> மும்மீன் விடுதி
Four star hotel> நான்மீன் விடுதி

Five star hotel> ஐம்மீன் விடுதி

Six star hotel> அறுமீன் விடுதி....

Abridge> சுருக்கு/ அடக்கு
Abridged> சுருக்கிய/ அடக்கப்பட்ட
Abridgement> சுருக்கம்/ தொகுப்பு
Abrogable> ஒழிக்கத் தக்க
Abrogate> வழக்கொழி/ ஒழித்துக்கட்டு
Abrogation of agreement> உடன்பாட்டைத் தீர்த்தல்/ உடன்பாட்டை முறித்தல்
Foreign Exchange> அயல் பணமாற்று
Employment Exchange> வேலை வாய்ப்பகம்
Exchange Deed> பரிமாற்ற ஆவணம்
Extract> எடு குறிப்பு
Fancy goods> பகட்டுச் சரக்கு
Favouritism> ஒருசார் பற்று
Few> மிகச் சில
Flat rate>  ஒரு மட்ட விலை
Financial target> பண இலக்கு

Monday, March 27, 2017

பாடப் புத்தகங்களின் பயன்பாடு - பாகம் 2

TAMILSJKT
உயர்நிலை சிந்தனைத் திறன் கேள்விகளை உருவாக்குவதில் பாடப் புத்தகங்களின் பயன் எல்லையற்றது. அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என இங்குப் பார்க்கலாம்.

ஆண்டு 6.


1.இப்படத்தில் நீ காணும் சிக்கல் யாது ?
       
   __________________________________________________

2. இச்சிக்கலுக்கான காரணம் என்னவாக இருக்கலாம் ?
      
   ___________________________________________________

3. இச்சிக்கல் மேற்கொள்ளப்படுவதால் விளையும் நன்மைகள்
    இரண்டனை எழுதுக.
    i.  __________________________________________________

   ii. __________________________________________________

இது ஒரு மாதிரியே. இவற்றைப் போன்று இன்னும் பல உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகளை நாம் உருவாக்கலாம்.

நன்றி.