TAMILSJKT
வணக்கம் நண்பர்களே...
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாய்மொழி நாளிதழில் நான் எழுதிவரும் தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டியைப் பார்த்திருப்பீர்கள். அதில், ஏதேனும், குறை இருப்பின் என் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். மாணவர்களுக்குச் செல்லும் இதில் தவறு ஏதும் இருந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் எனக்குத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
கண்டிப்பாக இதற்கு யாரும் கருத்துத் தெரிவிக்க மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதும்.
நிற்க,
இவ்வாரம் தொடங்கி என் வலைப்பூவில் யு.பி.எஸ்.ஆர்., கட்டுரை வழிகாட்டி எழுதவுள்ளேன். வழக்கம் போலவே பதிவிறக்கம் தடை செய்யப்பட்டு அனுமதி கோரப்படும். ஆனால், இத்தடவை நீங்கள் பகிர்வு செய்யும் படைப்புகளை வைத்தே தரவிறக்க அனுமதியை வழங்கவுள்ளேன். பல தடவை கூறியும் 100 க்கு 98 % ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்வதில்லை. தேசியப் பள்ளிகளையும் சீனப்பள்ளிகளையும் பாருங்கள். தினமும் பயிற்றிகள், பயிற்சிகள் போன்றவற்றைப் பதிவிடுகிறார்கள்; பகிர்கிறார்கள். அனைவரும் நன்மைபெற வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த எண்ணம் நமக்கு வர இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை தமிழ்ப்பள்ளிகள் இருந்தால்....
நன்றி.