Thursday, April 28, 2016

தமிழ் மொழி தொலைவரி குழுமம்

TAMILSJKT

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு தொலைவரி (TELEGRAM) குழுமம்

இன்றே இணையுங்கள்..

உங்கள் படைப்புகளையும் பகிருங்கள்... நன்றி.

https://telegram.me/joinchat/Al_OoT4NOCIvowR_zAZHyg

telegram for tamil school teachers...

plese click to ...

Friday, April 22, 2016

தமிழ் சொற்களஞ்சியம்

TAMILSJKT
வணக்கம் நண்பர்களே.. இவ்வாரம் தொடங்கி தமிழ் சொற்களஞ்சியம் என்ற புதிய பகுதியைத் தொடங்கவுள்ளேன். இங்கே கொடுக்கும் சொற்களில் ஐயம் இருப்பின் தொடர்பு கொள்க. சொற்களஞ்சியம் தவிர்த்து, இலக்கண விளக்கங்களும் இங்கே இடம் பெறும்.

மூலம். : காப்பியத்தமிழ்
நன்றி. : ஆசிரியர்  சு.செ.திருவருள்

Upload-பதிவேற்றம்
Download-பதிவிறக்கம்
Update-இற்றைப்படுத்துதல்

புணர்ச்சி...

புணர்+சி=புணர்ச்சி
உணர்+சி=உணர்ச்சி

மகிழ்+சி=மகிழ்ச்சி
நிகழ்+சி=நிகழ்ச்சி

நிகழ்+வு=நிகழ்வு
வாழ்+வு=வாழ்வு

கட+உள்=கடவுள்

அருமை+வினை=அருவினை

கருமை+விழி=கருவிழி

நெடுமை+புனல்=நெடும்புனல்

பைம்மை+கூழ்=பைங்கூழ்
(குறள் 550)

Grade-தரநிலை
Curriculum-கலைத்திட்டம்
Design-வடிவமைப்பு
Essay-கட்டுரை

Explicit-தெரிநிலை
Implicit-புதைநிலை

Factor-கரணியம் (காரணம்)
Fluent-சரளம்
Holistic-முழுநோக்கு
Idea-ஏடல் (தன் கருத்து)

Points system-புள்ளிமைத்திட்டம்

Aptitude test-நாட்டத்தேர்வு
Aspect-கூறு
Assumption-கருதுமை
Band-கட்டு (தேர்வு)
Bias-சார்புமை
Cohort-பயில்குழு
Data-தரவு
Errata-திருத்தப்பட்டி
Key-திறவி
Task-இடுபணி

Human-மாந்தன்
Identity card-அடையாள அட்டை
Incident-நிகழ்வு
Nationality-குடியுரிமை
On duty-பணிநிமித்தம்
Slogan-சொலவகம்

புணர்ச்சி...

நறுமை+மலர்=நறுமலர்

நறுமை+முகை=நறுமுகை

நறுமை+மணம்=நறுமணம்

பைம்மை+தொடி=பைந்தொடி

காமம்+நோய்=காமநோய்
நன்னூல்...

பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.

பூச்செடி, பூஞ்செடி,

பூத்தோட்டம், பூந்தோட்டம்


நாண்+உம்=நாணும்

•உயிர்(பிராணன்) உள்ள
 அஃறிணை அனைத்தும்
 உயிரி(பிராணி).

•விலங்கு என்றால்
 குறுக்கே வளர்வன
 (மிருகம்) என்று பொருள்.

• முட்டையிலிருந்து
   வருவன -குஞ்சு.
   முழுஉடலுடன்
   நேரடியாய்ப் பிறப்பன -
   குட்டி (ஆங்.Kid)

சொல் வேறுபாடு
~~~~~~~~~~~~
சொற்களைப் பொருளறிந்து பயன்படுத்தல் வேண்டும்.
௧) அரிவாள்/அறுவாள்:
     பொருள்களைச் சிறி
     தாய் அறியும் வாள்
அரிவாள்(அரிவாள்மணை)
    பொருள்களை அறுக்கும்
    வாள் அறுவாள்.
   (வெட்டறுவாள்)
௨)அரை/அற:
   அரைப்படித்தவன் –
        குறைவாகக் கற்றவன்.
   அறப்படித்தவன் –
         முற்றக்கற்றவன்
௩)அல்ல/இல்லை:
     ஒன்று இன்னொன்று
     அல்லாமையைக்
     குறிப்பது அல்ல.
அன்று(ஒருமை)
அல்ல(பன்மை)
எ-டு: அதுபொதுவழிஅன்று.
அவைபொதுவழிகள்அல்ல.
     ஒன்று ஓரிடத்தில்
     இன்மையைக் குறிப்பது
     இல்லை
எ-டு:அவன்இங்கேஇல்லை.
௪)பண்டிகை/ திருவிழா:
    பண்டிகை – வீட்டில்
         கொண்டாடப்படுவது.
    திருவிழா – வெளியில்
         கொண்டாடப்படுவது.
(பாவாணர்க்கும்
 தமிழநம்பிக்கும் நன்றி)

கடுமை+புனல்=கடும்புனல்



மன்+உயிர்=மன்னுயிர்

௫)தேர்ந்தெடு/ தெரிந்தெடு
     தேர்ந்தெடு – (ஆங்.)
           examine and select.
    தெரிந்தெடு – (ஆங்.)
           select, elect.
௬) வருமானம்/வரும்படி :
      வருமானம் - (ஆங்.)
            proper income
      வரும்படி - (ஆங்.)
           additional income
௭)பருமை/பெருமை:
      பருமை - (ஆங்.) bulk.
      பெருமை - (ஆங்.)
         greatness, dignity, pride,
         excess, increase.
௮)புறக்கடை/புழைக்கடை:
        புறக்கடை - (ஆங்.)
                backyard.
       புழைக்கடை - (ஆங்.)
               narrow passage.
௯)விவரி/விரி:
      விவரி - (ஆங்.) give the
              details of.
      விரி - (ஆங்.) expand.
௧௰)வழக்கம்/ பழக்கம்:
      வழக்கம் - (ஆங்.) habit,
           custom.
      பழக்கம் - (ஆங்.)
         practice,  acquaintance.
௧௧) நிறுத்து/நிறுவு:
         நிறுத்து - (ஆங்.)
             stop, post,
             make anything stand.
         நிறுவு - (ஆங்.)
             establish.
௧௨) கருப்பு/கறுப்பு:
         கருப்பு - (ஆங்.)
             blackness.
         கறுப்பு - (ஆங்.) rage,
            darkening of the face
            through anger.
௧௩)கட்டிடம்/கட்டடம்:
        கட்டிடம் – (ஆங்.) site.
        கட்டடம் – (ஆங்கிலம்)
            building, binding
----------------------------------------------







Thursday, April 21, 2016

கட்டுரை வழிகாட்டி

TAMILSJKT
வணக்கம் நண்பர்களே...
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாய்மொழி நாளிதழில் நான் எழுதிவரும் தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டியைப் பார்த்திருப்பீர்கள். அதில், ஏதேனும், குறை இருப்பின் என் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். மாணவர்களுக்குச் செல்லும் இதில் தவறு ஏதும் இருந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் எனக்குத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
கண்டிப்பாக இதற்கு யாரும் கருத்துத் தெரிவிக்க மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதும்.
நிற்க,

இவ்வாரம் தொடங்கி என் வலைப்பூவில்  யு.பி.எஸ்.ஆர்., கட்டுரை வழிகாட்டி எழுதவுள்ளேன். வழக்கம் போலவே பதிவிறக்கம் தடை செய்யப்பட்டு அனுமதி கோரப்படும். ஆனால், இத்தடவை நீங்கள் பகிர்வு செய்யும் படைப்புகளை வைத்தே தரவிறக்க அனுமதியை வழங்கவுள்ளேன். பல தடவை கூறியும் 100 க்கு 98 % ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்வதில்லை. தேசியப் பள்ளிகளையும் சீனப்பள்ளிகளையும் பாருங்கள். தினமும் பயிற்றிகள், பயிற்சிகள் போன்றவற்றைப் பதிவிடுகிறார்கள்; பகிர்கிறார்கள். அனைவரும் நன்மைபெற வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த எண்ணம் நமக்கு வர இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை தமிழ்ப்பள்ளிகள் இருந்தால்....

நன்றி.

Saturday, April 9, 2016

PANDUAN TEMUDUGA SPP PEGAWAI PERKHIDMATAN PENDIDIKAN

TAMILSJKT
Artikel ini ditulis oleh Admin Pendidik2u,
PANDUAN TEMUDUGA SPP PEGAWAI PERKHIDMATAN PENDIDIKAN DG41

Sebelum menghadiri temuduga pastikan semua dokumen dan bahan-bahan dalam senarai semak cukup dan lengkap.
Contoh senarai semak temuduga SPP bagi PPPS DG41:


DOWNLOAD SENARAI SEMAK DOKUMEN TEMU DUGA BAGI PERMOHONAN KE JAWATAN PEGAWAI PERKHIDMATAN PENDIDIKAN (PPP) : 


BIL

DOKUMEN

ASAL

SALINAN
1

 Kad Pengenalan
2

 Sijil Lahir/ Sijil pendaftaran Kelahiran
(Bagi calon yang lahir di luar Negara, sila kemukakan borang W / Surat Pengesahan Kewarganegaraan dari Jabatan Pendaftaran Negara)
3

 Kepujian Bahasa Malaysia yang diperolehi (mana yang berkenaan)
SPM/MCE/SPVM/SPMV;
SAP/GCE (Kepujian Bahasa Melayu); atau
STPM/STP/HSC
4
Diploma
5
Ijazah
(Sekiranya ijazah yang diperolehi dalam bahasa selain Bahasa Melayu dan Bahasa Inggeris, surat terjemahan dalam Bahasa Melayu atau Bahasa Inggeris adalah diperlukan dan terjemahan hendakalah dibuat oleh Institut Terjemahan Negara Malaysia atau Pejabat Kedutaan Malaysia di Negara berkenaan atau Jabatan Agama Islam Negeri bagi ijazah Bahasa Arab sahaja)
6
Surat tawaran mengikuti program di Institut Pendidikan Guru (IPG) / surat pengesahan belajar dari Pengarah IPG
7
*CALON SEDANG BERKHIDMAT
Surat kebenaran cuti belajar
8
GAMBAR BERUKURAN PASSPORT

 Tuan/puan juga dikehendaki membawa Buku Rancangan Pengajaran Harian semasa praktikum untuk sesi temu duga.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLvFapJZw6ZJIAYNXEQSTeagcC4BXUPkP-Z1_au7xTQL6s-2ker09rB40bqNX5pozqK34P0nlEGtVKYUcC3SkS2XUBU51BmvfzLm5IuhUMPFxlf3s0GbFHNDYT9XawNXMBcjcSE285Odk/s320/Screenshots_2015-11-22-11-30-51.png

Apakah contoh-contoh soalan yang panel penemuduga selalu ajukan?
Kebiasaannya dalam 1 bilik temuduga ada 2 orang panel yang berpengalaman yang akan menemuduga anda. Kebiasaannya dalam 1 sesi 5 orang calon akan masuk serentak. Tetapi soalan yang ditanya jawab secara individu. Di antara soalan-soalan yang ditanya.
1.                   Apakah nama jawatan yang anda temuduga ini?
2.                   Apakah kaedah yang anda gunakan di dalam sesi pengajaran dan  
pembelajaran?(Soalan ini boleh dikatakan wajib, setiap calon perlu huraikan 1
kaedah yang digunakan dalam PNP.Oleh itu ulangkaji Ilmu Pendidikan supaya
bersedia dengan jawapan dan teori yang betul)
3.                    Apakah yang anda faham mengenai Falsafah pendidikan Negara?
4.                   Apakah maksud KSSR, LINUS, 1M1S ?
5.                   Apakah MBMMBI, (DOWNLOAD MBMMBI PDF), PBSSAPS,SPPBS?
6.                   Sekolah berprestasi tinggi.
7.                   NKRA Pendidikan
8.                  Pelan Strategik Interim
9.                    RMK 10 Pendidikan
10.               Soalan-soalan lain yang berkaitan dengan kos anda : Cth bagi KPLI j-QAF Apakah
             Peranan Guru j-QAF dalam membangunkan modal insan.
11.                Maklumat baru: Pelan Pembangunan Pendidikan Malaysia 2013-2025 - Bahasa  
             Malaysia.
12.                Memahami Pelan Pembangunan Pendidikan Malaysia, 11 anjakan. (BARU)
13.                PELAN PEMBANGUNAN PENDIDIKAN MALAYSIA [FULL VERSION WAJIB BACA]
14.                Kementerian Pelajaran Malaysia telah digabungkan dengan Kementerian  
              Pengajian Tinggi dan ditukar nama ke Kementerian Pendidikan Malaysia
15.                Barisan Kabinet 2013 
16.                Bagi calon j-QAF perlu juga faham : Modul j-QAF
17.                Koleksi Soalan SPP Bagi Opsyen Pendidikan Islam ( BARU 2013 Berdasarkan  
              Pengalaman Calon-calon 2013)
18.               Koleksi Soalan Temuduga Guru (UPDATE 1 DEC 2013)
19.                Panduan Masuk ke Bilik Temuduga (Update 1 Dec 2013)
20.               Isu PBS - (Sila Jawab dengan Profesional)
21.                MMI - Melindungi Masa Instruksional (NEW 2014)



Anda juga harus faham bahawa Ahli Panel bukan sebarangan orang, anda perlu menunjukkan sikap professional yang mencerminkan anda seorang pendidik. Selain itu, anda juga perlu bersedia dengan soalan-soalan yang tidak dijangka berkenaan isu-isu semasa. Mungkin juga anda rasa jawapan betul atau salah tidak mengapa janji bercakap dengan yakin...Ooopss anda SILAP. Sememangnya mereka inginkan jawapan yang betul. Setiap jawapan yang betul ada markahnya, keyakinan terletak dalam kategori lain yang dinilai bersama. Panel Penemuda sudah berpengalaman dan sudah jumpa ramai calon, jadi anda perlu tunjukkan anda adalah orang yang layak untuk jawatan ini.

Anda juga hendaklah berpakaian kemas dan bersih. Sememangnya anda sudah berpengalaman sebelum ini mungkin ketika temuduga KPLI atau Jawatan lain.

Perlu diingatkan juga, salah 1 perkara yang sangat penting adalah Sijil Akademik anda, boleh dikatakan jika anda gagal menunjukkan Skrol Ijazah anda mereka akan ‘hold’ jawatan anda, sepatutnya anda dapat DG41, tetapi kerana gagal menunjukkan sijil tersebut anda perlu mengambil temuduga semula pada akan datang. 

Oleh itu, pastikan senarai semak anda betul-betul lengkap dan sijil-sijil disahkan oleh pegawai yang layak.
Selamat berjaya kepada semua calon...

Terima kasih :
Untuk panduan lanjut sila klik link di bawah...



Sunday, February 14, 2016

JULAT MARKAH PEPERIKSAAN MULAI 2016

TAMILSJKT
KPM Terkini: Julat dan Gred Terkini 2016 Untuk Sekolah Rendah dan Menengah
Pada tahun 2015, pihak LPM telah mengeluarkan julat untuk gred bagi murid KSSR. Namun julat itu telah berubah dan kini disiarkan julat untuk gred tersebut.
SEKOLAH RENDAH (TAHUN 1 - TAHUN 6)





Friday, February 12, 2016

விண்ணப்பம்

TAMILSJKT
வணக்கம் ஆசிரியர்களே,
பெரும்பாலும் தனிப்பட்ட வேண்டுகோள் எதையும் இங்குப் பதியக்கூடாது என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மைக்காக அதைப் பதிய வேண்டும் என்று எண்ணுகிறேன். பல தடவை சொல்லியாகி விட்டது. இப்பக்கம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு பக்கம் என்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை என்னிடம் பகிர்ந்து கொண்டால், அதை இங்கு பதியலாம் என்றும்! அது ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும். எனக்கு மட்டும் இருந்தால் போதும்…. அடுத்தவரிடமிருந்துதான் நான் எடுத்துக் கொள்வேன்.. என்னுடைய படைப்புகளை ஒருநாளும் மற்றவரிடம் பகிர மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மை யாருக்கும் பயனளிக்காது. எனவே, தாங்கள் அல்லது தங்கள் வட்டாரம் தயாரித்த மாதிரிக் கேள்வித்தாள்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதை இங்குப் பதிவேன். தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 40 பேர் இங்குள்ள தரவுகளைப் பதிவிறக்கம் வேண்டி விண்ணப்பம் செய்கின்றனர். ஆனால், தங்களுடைய படைப்புகளைப் பகிரும் எண்ணம் ஒருவருக்கும் இருப்பதில்லை. இதுவரை நம் சமுதாயம் குறுகிய மனப்பான்மையுடனும் சுயநல எண்ணத்துடனும் வாழ்ந்தது  போதும்.  தன்னலத் தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள். அனைவரும் பயனடைவோம்.

நன்றி.