Sunday, March 17, 2019

அறிவுறுத்தல்

TAMILSJKT
வணக்கம். என் வலைப்பூங்காவில் உள்ள கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், உண்மையில் தேவையெனின் பதிவிறக்க வேண்டுகோள் விடுக்கவும். இஃது ஆசிரியர், மாணவர், பெற்றோர்களுக்கு உதவும். இது மற்ற வலைப்பூங்கா போன்றல்ல. பொறுப்பற்ற ஒரு சிலர் சில கோப்புகளைப் பதிவிறக்க அனுமதி கோரிவிட்டு, பிறகு யார் நீங்கள், எனக்கு ஏன் அனுப்பினீர்கள் என்பதெல்லாம் பொறுப்பற்ற செயல். 
TAMILSJKT




ஆறாம் மாணவர்களுக்கு இன்று ‘கையசைத்தல் (lambaian tangan) எனும் எளிய நுட்ப முறையில் சிறுகதை எழுதும் பட்டறையும், ‘யார் அவர்கள்’ என்னும் நுட்ப முறையில் (skop) மூலம் வாக்கியம் அமைத்தல் பட்டறையும் நடத்தினேன். மெதுபயில் மாணவர்கள்கூட இம்முறையை எளிதாகக் கற்றுக் கொண்டு சிறுகதை எழுதினர் என்பதில் மகிழ்ச்சி. என் பள்ளி மாணவர்களுக்கு இது வெள்ளோட்டமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Saturday, December 22, 2018

Tuesday, September 18, 2018

படைப்பு

TAMILSJKT
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்.
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவரகள்.