Thursday, December 26, 2019

ஒரு நிமிடம்

TAMILSJKT

வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாள்களாக நண்பரகள் சிலர் ஏன் என் வலைமணையில் எந்த ஒரு பதிவும் இல்லை எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாண்டு உண்மையில் எதுவும் பதிய வேண்டுமா என்ற கேள்வி. சிலர் இருப்பர். ஒரு துரும்பைக்கூட அசைத்திருக்க மாட்டார்கள். ஒரு வெற்றுத் தாளையும் பகிர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும் 'ஷேர்'. ஆண்டுக் கூட்டத்திலிருந்து, செயலறிக்கை, பயிற்சித்தாள்கள் இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால், அவர்களின் பங்கு எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு பதிவில் நான் கருத்துச் சொல்லப் போக, அந்த மெத்தப் படித்த அறிவாளி, என்னைக் குறை கூறத்தொடங்கினார். நான் எங்குப் போனாலும் கோப்புகளை மற்றவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு ( அதாவது 'காப்பி') செய்து கொண்டு வருகிறேன் என்று! அந்த அளிவாளியைப் பாராட்டியே ஆக வேண்டும். நான் அப்படிப் பிச்சை எடுத்து வருபதெல்லாம் எனக்காக அல்ல. என் வலைப்பதிவில் அனைவரும் பயனபெற வேண்டுமென நினைத்து அவற்றைப் பதிகிறேன். அதுகூட தெரியாத அறிவிலியா அவர்! இறைவா, அந்த மாணவர்களைக் காப்பாற்று. 

Wednesday, August 21, 2019

கட்டுரை வழிகாட்டி 2019

TAMILSJKT
கட்டுரை வழிகாட்டி 2019

வேண்டும் முன் பகிருங்கள்….
அனைவரும் பயன்பெற உங்கள் பயிற்றிகள், தேர்வுத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை முதலில் மற்றவருடன் பகிருங்கள்.
எடுக்கும் குணம் விடுத்து, கொடுக்கும் குணமும் வளர்ப்போம்.
இந்தக் கட்டுரை வழிகாட்டி கட்டுப்படுத்தப்பட்டதாகும்.



உங்கள் பணிகள் / படைப்புகள் இந்த வலைமனையில் பதிய முதலில் மின்னஞ்சல் செய்யுங்கள்.

Sunday, August 4, 2019

MODUL REVISI BT UPSR 2019 / யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை தொகுப்பு 2019

TAMILSJKT


வணக்கம். இந்தப் பயிற்றி ஒரு மீள்பார்வை தொகுப்பு மட்டுமே. தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இதனால் பயனடைவர் எனின் மகிழ்ச்சியே. இதன் விடைப்பட்டி இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். அதை என் வலைப்பூவில் பதிய இதுவரை எண்ணமில்லை. தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்போருக்கு மட்டுமே அஃது அனுப்பி வைக்கப்படும். இது முற்றிலும் இலவயமானது. இந்தப் பயிற்சி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதே என் எண்ணம். இத்தொகுப்பை எந்தவொரு தடையுமின்றி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி ….. எனப் படித்திருப்போம்.