TAMILSJKT
அனைவருக்கும் வணக்கம்.
நான் இங்குப் பதியும் ஆண்டு பாடத்திட்டங்கள், செய்யுளும் மொழியணியும் குறிப்புகள், வினாத்தாள்கள் ( அடுத்த பதிவுகளில் இடம் பெறும்) யாவும் என் தனி மனித உழைப்பன்று. இது ஆசிரியர்கள் பலரின் உழைப்பு. ஆசிரியர்கள் சிலர் எனக்கு நேரடியாக மின்னஞ்சல் செய்து, அனைவருக்கும் பயன்படும்படி வலைப்பூங்காவில் பதிவு செய்யக் கூறுகிறார்கள். சிலவற்றை நான் மற்ற இடங்களில் இருந்து அனுமதியோடு எடுத்துப் பதிவிடுகிறேன். எனவே, சில சமயங்களில் அவற்றில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் காணப்படுவதுண்டு. அவற்றை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். சற்று முன்பு ஓர் ஆசிரியை 'ஆத்திச்சூடியில்' 'ச்' வராது என்று கூறினார். ஆம், வராது. உடனே திருத்தி விட்டேன். இந்த வலைப்பூங்கா அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆசிரியர்களாகிய நீங்களும் உங்களிடம் உள்ள ஆண்டு பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், திருத்தங்களுடன் அவை இந்த வலைப்பூங்காவில் பதிவேற்றப்படும்.
muni2622@gmail.com
இங்கு நான் பதிவிட்டிருக்கும் UPSR பயிற்சிகள் யாவும் என் உழைப்பிலும் சிந்தனையிலும் உருவானவை. அவற்றைப் பற்றியும் தாங்கள் கருத்துக்களைக் கூறலாம்.
இனிவரும் காலங்களில் உங்களிடம் இருந்து பல தரவுகளை எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி வேலை செய்தால் பளு தெரியாது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த வலைப்பூங்காவின் வழி, ஒன்றிணைய வேண்டும். நன்றி.
No comments:
Post a Comment