Monday, January 2, 2017

புத்தாண்டு வாழ்த்துகள்

TAMILSJKT
வணக்கம். பிறந்து விட்டது 2017. மீண்டும் பள்ளிக்குச் செல்ல நம்மை அணியமாக்கிக் கொண்டோம். என் வலைதளத்தில் இருக்கும் தர ஆவணங்கள், ஆண்டு பாடத்திட்டங்கள், பயிற்றிகள், வினாத்தாள்கள், வியூக  செயல் திட்டம் போன்றவை பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக சிலர் அழைத்தும், மின்னஞ்சல் வழியாகவும் தெரிவித்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு ஜொகூரிலிருந்து லங்காவி வரை ஏறக்குறைய  60 க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு யு.பி.எஸ.ஆர்., பயிற்சிப்பட்டறை நடத்தச் சென்றிருந்தேன். ஒரு தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர் என்ற என் கடமை இது. இவ்வாண்டும் இச்சேவை தொடரும். ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த வலைப்பூவின் தமிழ்மொழி பக்கத்தை முடக்கி வைத்துள்ளேன். தேவைப்படுவோர் தங்கள் பள்ளியின் பெயரையும் தங்கள் பெயரையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்பினால் அவை மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். ( வினாத்தாள்கள் உட்பட ).

வழக்கம் போலவே இவ்வலைப்பூவிலிருந்து தங்களுக்கு வேண்டியதை உருவிக்கொள்ளும் பலர், பிரதிபலனாக தங்கள் வேலைகள் எதையும் பகிர்வதில்லை. மிக்க நன்றி. சுயநலம் என்ற ஒரு வலையிலிருந்து வெளிவந்தால் தமிழாசிரியர்களான நாம் ஒன்றுபட்டு உழைத்து நம் மாணவர்களை உயர்த்த முடியும். ஒரு சிலர் மிகவும் கெட்டிக்காரர்கள். இவ்வலைப்பூவில் இருக்கும் சில பயிற்சிகள், மாதிரித்தாள்கள், பயிற்றிகள் போன்றவற்றைத் தரவிறக்கம் செய்து மீள்பார்வை புத்தகம் போட்டு காசு பார்க்கின்றனர். அதற்குச் சேவை என்ற பெயரையும் வைத்துக் கொண்டு அனைவரையும் ஏமாளியாக்குகின்றனர். அவர்களுக்கும் நன்றி.

ஒருசிலர் என்னைப் பற்றி குறைகளை வெளியில் கூறிக்கொண்டும் மொட்டைக் கடிதங்கள் போட்டுக் கொண்டும் இந்த வலைப்பூவில் தங்களுக்கு வேண்டியவைகளை உருவிக் கொண்டே இருக்கின்றன. (எழுத்துப்பிழையோ இலக்கணப்பிழையோ அன்று). அவர்களின் தன்மானத்திற்கும் நன்றி.

2017 என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்பான ஆண்டு. பணியிட வகையில் மிக மோசமான ஆண்டு. தலைசிறந்த நடிகர்கள் ( இவர்கள் ஆசிரியர்கள் ) சிலரால் மனம் வேதனையும் பட்டேன். 

எது எவ்வாறாயினும்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் என் பணி தொடரும்.


Thursday, December 29, 2016

TAMILSJKT


நாள் பாடத்திட்ட மாதிரி

TAMILSJKT

21 ஆம் நூற்றாண்டு கல்விக்கான நாள் பாடத்திட்ட மாதிரி ( word )

21 ஆம் நூற்றாண்டு தமிழ்மொழி நாள் பாடத்திட்டத்தை எவ்வாறு எழுதலாம் என்பதற்கான ஒரு மாதிரி. அதன் தொடர்பைச் சொடுக்குக.

21 நூற்றாண்டு கல்விக்கான நாள் பாடத்திட்டம் மாதிரி ( PDF )

21 ஆம் நூற்றாண்டு தமிழ்மொழி நாள் பாடத்திட்டத்தை எவ்வாறு எழுதலாம் என்பதற்கான ஒரு மாதிரி. அதன் தொடர்பைச் சொடுக்குக.

Tuesday, December 27, 2016

KALENDER PERSEKOLAHAN 2017

TAMILSJKT




TERIMA KASIH :
http://www.sistemguruonline.my/2016/07/kalendar-2017-malaysia-versi-terbaik.html

Tuesday, August 30, 2016

TAMILSJKT
வணக்கம். இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சிறந்த அடைவுநிலை பெற வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வலைப்பூங்காவழி, தமிழ்மொழி தொடர்பாக நானும் சிறு பங்களித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என் வலைப்பூவை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1000 பேர் உலா வருகின்றனர். இதிலிருந்து, இவ்வலைப்பூங்கா அவர்களுக்கு எந்த அளவு உதவியிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். என் வலைப்பூவிலிருந்து பெரும்பாலான கோப்புகளை நேரடியாகத் தருவிக்க முடியவில்லையென்றும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கிறது என சிலர் வருத்தம் தெரிவித்தனர். எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு. தமிழ்மொழி திறமிகு ஆசிரியர் என்ற முறையில் கணக்கெடுப்பு எனக்குத் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில் என் வலைப்பூவை மேலும் மெருகேற்ற எண்ணம் கொண்டுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. சரி, தமிழ்மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதாவது இறுதிநேர அறிவுரை....
மாணவர்களே, உங்கள் ஆசிரியர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேளுங்கள். அவர்களைவிட உங்களை அதிகம் தெரிந்தவர்கள் இலர். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.

Monday, August 29, 2016

வாழ்த்துகள்

TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தேர்வு எழுத மாணவர்கள் அனைவரும் தயாராக இருப்பர் என்பது உறுதி.  இது தமிழ்மொழிக்கான தளம் என்பதால் அதைப் பற்றியே பேச விரும்புகிறேன்.
தமிழ்மொழி தாள் 1, தாள் 2 என்று இரண்டு தாள்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.

இத்தளத்தின் வாயிலாக நான் வழங்கிய பயிற்சிகள், வழிகாட்டல்கள் அனைத்தும் உங்களுக்குப் பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதஙியாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விடயங்களை உங்கள் முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.

1. தேர்வை நம்பிக்கையோடு அணுகுங்கள்.
2. கேள்விகளைக் கவனமாகப் படித்து பதில் அளியுங்கள். அவசரம் 
    வேண்டாம்.
3. 

Sunday, May 15, 2016

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தொழிலாய் அறப்பணியாய் ஏற்று, கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்



எங்கள் விரல்கள் பட்ட
களிமண்களும் சிற்பங்களாய்..
எங்கள் வியர்வைகள் உங்களைப்
பலவாறாக வடிவமைத்திருக்கலாம்
மருத்துவராய்.....
வழக்குரைஞர்களாய்..
பொறியியளார்களாய்...
வணிகர்களாய்..
அமைச்சர்களாய்..
எவ்வாறேனும்!

எங்களை நோக்கி வீசப்படும்
வார்த்தைகளில் காயப்பட்டும்
மறுநிமிடங்களில் மீண்டும் மீண்டும்
ஆசிரியர்களாய் ஜனித்து விடுகிறோம்
நான்கு புறங்களிலும் கல்லெறிபடும்
விநோத படைப்புகள் நாங்கள்!
காயப்படுத்தும் எந்தக் கற்களையும்
எங்கள் வகுப்பறை குழந்தைகளைத் தீண்ட
நாங்கள் வழி கொடுப்பதில்லை
உங்கள் தேர்வின் உயர்வுக்குத்
தேய்ந்து தேய்ந்தும் தேயாமலேயே
வளர்கிறோம்..

எங்கள் உலகத்தில்
நாங்கள்தாம் அனைத்துமாய்..
ஆசிரியர் என்ற எங்கள் உலகத்தில்
நாங்கள் நாள்தோறும்
பல அவதாரங்களில்..
மருத்துவர்களாய்..
வழக்கறிஞர்களாய்..
தோட்டக்காரச் செல்வங்களாய்
ஓட்டுநர்களாய்..
பயிற்றுநர்களாய்..
உலகத் தொழில்களில்
ஏதாவது ஒன்றிலுமாய் இருப்பினும்..

நாங்கள் வாழ்வதோ
இன்னொரு பெற்றோராய்
எங்களுக்கான வகுப்பறைகளில் !!!

*முனியாண்டி ராஜ்.*