தமிழ் மொழி 036 மற்றும் 037 க்கான வழிகாட்டி இங்கே BAHASA TAMIL 2016 என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அடுத்தாண்டு தேர்வுக்கான தமிழ் மொழி தாள் எவ்வாறு அமையுமென இதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். இக்குறிப்பைப் பற்றி ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
HOME
- Home
- DSKP/RPT/MODUL KSSR
- தமிழ் கலைச்சொல் பட்டியல்
- தமிழ்க் கலைச்சொல் வரிசை 02
- செய்யுள், மொழியணி
- பயிற்றிகள்
- LATIHAN DAN MODUL BAHASA TAMIL
- கதை, கட்டுரை வழிகாட்டி
- விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்
- KERTAS SOALAN
- UJIAN AKHIR SESI AKADEMIK (UASA)கல்விப் பருவ இறுதி மதிப்பீடு
- காணொளிகள்
- DSKP/RPT/MODUL KSSR
- கடிதம்
Tuesday, October 20, 2015
Sunday, October 11, 2015
யு.பி.எஸ்.ஆர்., புதிய வடிவமைப்புப் பற்றிய விவரங்களை விரைவில் இனிமேல் பதிவு செய்வேன். அண்மையில், புதிய வடிவத்திற்கான தலைமைப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளுக்கும் சென்று வந்தேன். இன்னும், மாநில மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. அதன்பின், அது தொடர்பான விளக்கங்களையும் மாதிரித் தாள்களையும் இங்கே பதிவேற்றுவேன்.
Sunday, August 30, 2015
தமிழ் மொழி தேர்வுக்களம் 2015 பட்டறை
இன்று, 30.8.2015 (ஞாயிறு) பெட்டாலிங் வட்டார (champions proggramme) தமிழ்ப்பள்ளிகளுக்கான தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பட்டறையை வழி நடத்தினேன். ஏறக்குறைய 100 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி இலாகா ஏற்பாடு செய்திருந்த இப்பட்டறையில் தேர்வுத்தாளை அணுகும் வழிமுறைகள், மாணவர்கள் செய்யும் தவறுகள், சிறந்த கதை, சிறுகதைக்கான கூறுகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டன. நினைவுக்காக ............
Friday, August 28, 2015
யு.பி.எஸ்.ஆர்., தேர்வுக்களம் 2015 - தமிழ் மொழி தாள் 2
இன்று 28.8.2015(வெள்ளி) மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை, என் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி தாள், பகுதி 2 (கட்டுரைகள் மட்டும்) தேர்வு வழிகாட்டி வகுப்பை நடத்தினேன். கட்டுரைத் தாளுக்கான விடையளிக்கும் முறை, மாணவர்கள் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான குவிவு போன்றவை ஆழமாக விளக்கப்பட்டன. மாணவர்களும் மாதிர் முன்னுரைகள், முடிவுரைகள் எழுதுதல், கருத்து விரிவாக்கம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, தமிழ் மொழி எழுத்துக்கான இவ்வாண்டின் கடைசி பட்டறை (என் பள்ளியில்) ஆகும். நினைவுக்காக சில நிழற்படங்கள்....
ழ
ழ
FOKUS UPSR BAHASA TAMIL 2015
இன்று என் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுக் களம் 2015 இன் இறுதி பட்டறை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 வரை நடைபெற்ற இந்தப் பட்டறையில் ஏறக்குறைய 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக் கேள்விகளை அணுகும் முறைகள், முக்கியத் தலைப்புகள் ஆகியவை விரிவாக அலசப்பட்டன. ஆசிரியர்கள் பலரை இப்பட்டறையைச் சிறப்பாக நடத்த கைகொடுத்தனர்.
இர
இர
Saturday, August 22, 2015
தேர்வுக் களம் வழிகாட்டிக் கருத்தரங்கு
இன்று 22.8.2015 (சனிக்கிழமை) போர்ட் டிக்சன் தமிழ்ப்பள்ளியில் FOKUS UPSR தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பயிலரங்கை நடத்தினேன். மாணவர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதம். ஏறக்குறைய 80 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில், மாணவரகள் தேர்வில் செய்யும் தவறுகள், அதைக் களையும் வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டன. ஏற்கனவே, அந்தப் பள்ளிக்குப் போயிருந்தாலும் இன்றைய பட்டறை மிகவும் வித்தியாசமானதாக இருந்ததாக பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கூறினர். நினைவுக்காக அவர்களுடன் எடுத்துக் கொண்ட சில படங்கள்...
Subscribe to:
Posts (Atom)