HOME
- Home
- DSKP/RPT/MODUL KSSR
- தமிழ் கலைச்சொல் பட்டியல்
- தமிழ்க் கலைச்சொல் வரிசை 02
- செய்யுள், மொழியணி
- பயிற்றிகள்
- LATIHAN DAN MODUL BAHASA TAMIL
- கதை, கட்டுரை வழிகாட்டி
- விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்
- KERTAS SOALAN
- UJIAN AKHIR SESI AKADEMIK (UASA)கல்விப் பருவ இறுதி மதிப்பீடு
- காணொளிகள்
- DSKP/RPT/MODUL KSSR
- கடிதம்
Sunday, February 14, 2016
Friday, February 12, 2016
விண்ணப்பம்
TAMILSJKT
வணக்கம் ஆசிரியர்களே,
பெரும்பாலும் தனிப்பட்ட வேண்டுகோள் எதையும்
இங்குப் பதியக்கூடாது என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மைக்காக
அதைப் பதிய வேண்டும் என்று எண்ணுகிறேன். பல தடவை சொல்லியாகி விட்டது. இப்பக்கம் தமிழ்ப்பள்ளி
ஆசிரியர்களுக்கான ஒரு பக்கம் என்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை என்னிடம் பகிர்ந்து
கொண்டால், அதை இங்கு பதியலாம் என்றும்! அது ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும்.
எனக்கு மட்டும் இருந்தால் போதும்…. அடுத்தவரிடமிருந்துதான் நான் எடுத்துக் கொள்வேன்..
என்னுடைய படைப்புகளை ஒருநாளும் மற்றவரிடம் பகிர மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மை யாருக்கும்
பயனளிக்காது. எனவே, தாங்கள் அல்லது தங்கள் வட்டாரம் தயாரித்த மாதிரிக் கேள்வித்தாள்களை
எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதை இங்குப் பதிவேன். தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு
நல்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 40 பேர் இங்குள்ள
தரவுகளைப் பதிவிறக்கம் வேண்டி விண்ணப்பம் செய்கின்றனர். ஆனால், தங்களுடைய படைப்புகளைப்
பகிரும் எண்ணம் ஒருவருக்கும் இருப்பதில்லை. இதுவரை நம் சமுதாயம் குறுகிய மனப்பான்மையுடனும்
சுயநல எண்ணத்துடனும் வாழ்ந்தது போதும். தன்னலத் தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள்.
அனைவரும் பயனடைவோம்.
நன்றி.
Wednesday, January 27, 2016
யு.பி.எஸ்.ஆர்., மாதிரி வினாத்தாள்கள் தொகுப்பு
அனைவருக்கும் வணக்கம்.
யு.பி.எஸ்.ஆர்., புதிய அமைப்பு முறைக்கான மாதிரித்
தேர்வுத் தாள்கள் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே,
இதைக் கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சிலர் ஒன்றுகூடி மாதிரி வினாத்தாள்
தொகுப்பு ஒன்றை,
தமிழ் மொழி
மலாய் மொழி
ஆங்கிலம்
அறிவியல்
கணிதம்
ஆகிய பாடங்களுக்கு வெளியிட எண்ணம் கொண்டுள்ளோம்.
அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆதரவு
இருந்தால் இப்பணியில் நாங்கள் வெற்றி காண்போம். எனவே, தங்கள் ஆதரவை இங்கே கருத்துப்
பதிவின் வழியோ, மின்னஞ்சல் வழியோ தெரியப்படுத்தும்படி அன்போடு கேட்டுக கொள்கிறேன்.
இத்தொகுப்பை எதிர்வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள்
வெளியிட எண்ணம் கொண்டுள்ளோம். தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களை நம்பி இப்பணியில் இறங்கியுள்ளோம்.
நன்றி. வணக்கம்.
Sunday, January 10, 2016
MICROSOFT 2016 PERCUMA
TAMILSJKT
Bagaimana cara untuk anda
dapatkan Microsoft Office 2016 ini, mudah sahaja, anda cuma
perlu sediakan perkara berikut:
1. Laptop/PC
2. Emel Yes anda, beserta
password sekali.
3. Capaian Internet (
Pastikan yang stabil dan laju lagi baik)
Ikut Langkah / Cara-cara
bergambar di bawah:
step 1 : Buka link ni https://products.office.com/EN-MY/student/office-in-education?tab=teachers
step 2 : Tekan student atau teacher
step 3
: Masukkan emel yes student atau teacher [Cth: namacikgu@yes.my]
step 4
: bukak emel yes tu, verify
(Email
Yes boleh dibuka di https://hopin.frogasia.com/app/me dan klik pada yesMail
di tab bahagian kiri)
step 6
: Register dan download office 365, dan boleh guna one drive 1tb free.
Step 7:
Setelah anda download "Setup File", anda perlu Run setup tersebut dan
ia akan Install di laptop/PC anda. Sila tunggu sehingga siap (lebih kurang 60
Minit) (BOOK ONLINE)
Pakej ini jika di
luar bernilai RM 29.90 sebulan,
tapi kerajaan sediakan untuk SEMUA GURU dan MURID tanpa apa- apa BAYARAN dan PERCUMA. Rugi kalau kita tidak
manfaatkannya. Anda juga boleh Install di Smartphone dan Tablet dengan
menggunakan applikasi yang telah disediakan.
TERIMA KASIH
http://www.pendidik2u.my
Friday, January 8, 2016
நினைவுறுத்தல்
TAMILSJKT
வணக்கம்.
இங்குப் பதியப்படும் இலக்கண, இலக்கியப் பயிற்சிகள்
மற்றும் பயிற்றிகளில் இருந்து பயிற்சிகளை எடுத்துத் தங்கள் பெயரில் புத்தகங்கள் வெளியிடும் நபர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர் உழைப்பை உறிஞ்சி வாழ்வது மிக இழிவான செயல்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மாணவர்களுக்கும்
குழந்தைகளுக்கும் இவற்றைப் பயிற்சியாக வழங்கி, அவர்களைத் தமிழ் மொழியில் சிறப்புத்
தேர்ச்சி அடையச் செய்ய வேண்டுமென்பதே இப்பக்கத்தின் தலையாய நோக்கமாகும்.
சில வருடங்களுக்கு முன் SPM மாணவர்களுக்கு நான்
செய்த பயிற்றியல் தொகுப்பு ஒன்றை ‘நண்பர்’ ஒருவர் மிகவும் கெட்டிக்காரத்தனமாக ஒரு
புத்தகமாக தன் பெயரில் வெளியீடு செய்தார் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
மற்றபடி, தனிப்பட்ட முறையில் யாரையும் சாடுவது என் நோக்கமல்ல. இதனால், தனிப்பட்ட நபர்
யாரும் மனவருத்தம் கொண்டால், இருகரம் கூப்பி மன்னிப்புக் கோருகிறேன்.
நன்றி.
Thursday, January 7, 2016
தமிழ் எழுத்துருக்கள்
TAMILSJKT
என் வலைப்பூவை வலம் வரும் அனைவருக்கும் வணக்கம்.
என் வலைப்பூவில் பதியப்படும் கோப்புகளைப் படிப்பதற்கும்
தரவிறக்கம் செய்வதற்கும் தமிழ் எழுத்துரு சிக்கலை எதிர்நோக்குவதாக பலரும் அழைத்தும்,
குறுந்தகவல் அனுப்பியும், புலனம்(what’s up) வழியும் தெரியப்படுத்தினர். அந்தச் சிக்கல்
கூடாது என்பதற்காக இங்கு அஞ்சல் செயலியையும் தமிழா செயலியையும் பதிவேற்றம் செய்துள்ளேன்.
பயனர்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து தங்கள் கணினியில் நிரவி விட்டால் சிக்கல் ஏதும்
ஏற்படாது. அப்படியும் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், புலனம் வழி எனக்குத் தெரியப்படுத்தவும்.
இந்த வலைப்பூ அனைவருக்கும் எந்தச்
சிக்கலையும் கொடுக்காது பயனளிக்க வேண்டுமென்பதே என் அவா. இங்கு ஆசிரியர்களைத் தவிர,
பெற்றோர்களும் வலம் வருகின்றனர் என்பதை அறிந்த மிக்க மகிழ்ச்சி. ஐயம் ஏதும் ஏற்படின்
என் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்க.
நன்றி.
அன்புடன்,
முனியாண்டி ராஜ்.
குறிப்பு : அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துகள்
பரணர், இணைமதி
Friday, January 1, 2016
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
TAMILSJKT
அன்புசால் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….
இன்னும் 3 தினங்களில்
பள்ளி திறக்கப்பட்டு நம் சக்கர வாழ்க்கை தொடங்கிவிடும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு
என்று நாமும் கூக்குரலிட்டோம். பெற்றோர்களும் அனுப்பி வைக்கின்றனர். சரி, இனி நாம்தான் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற
வேண்டும். ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் தங்களின் வேலைக்கும் அர்ப்பணிக்கும் ஏற்ற
அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வெறுப்படைந்து இருக்கலாம். நமக்கேற்ற கூலி என்றாவது
ஒருநாள் கிடைத்தே தீரும். அதை யாரும் தடுக்க முடியாது. நம் கடமையைச் செய்வோம். நம்மை
நம்பி வந்திருக்கும் நம் எதிர்காலச் சிற்பிகளுக்கு நல்லதொரு வழிதடத்தைக் காட்டுவது
நம் கடமையாகும். நம் வெறுப்பு, விரக்தி, ஆத்திரம் அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிட்டு,
நம் கடமையை ஆற்றுவோம். மற்றவர் பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் போல் கருதி பணியாற்றினால்
அதன் பலன் நம் பிள்ளைகளுக்குக் கண்டிப்பாய் சேரும் என்று உறுதியாக நம்புவோம்.
திறமையான, துடிப்பான
ஆசிரியர்கள் பலர் பள்ளியில் ஓரங்கட்டப்படுவதையும், ஏமாற்றுபவர்கள், போலியானவர்கள் பெறும்
மரியாதையைப் பெறுவதையும் கேட்டிருக்கிறேன். அந்தப் பாவத்தில் நாமும் சிக்கிக் கொள்ள
வேண்டாம்.
சரி, சொல்ல வந்த விடயத்தை
விட்டு விட்டேன். இங்குப் பதிவு செய்யப்படும் RPT, DSKP, MODUL போன்றவற்றை நான் ஒருவனே
பார்த்து உறுதி செய்வது கடினமான ஒன்று. நானும் ஆசிரியர்தான். எனக்கும் கடமைகள் உண்டு.
எனவே, எந்த RPT, DSKP, MODUL இல்லை என்று எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றைப் பதிவேற்ற
முயல்கிறேன். ஆசிரியர்கள் சிலர் புலனம் (whats app)) வழியாகவும் குறுந்தகவல் வழியாகவும்
எனக்குத் தெரியப்படுத்தும் போது, இயன்றளவில் அவற்றைப் பதிவேற்றி விடுகிறேன். எனவே,
ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் வேலைகளையும் தயவு செய்து என் மின்னஞ்சல் வழி அனுப்புங்கள்.
அனைவரும் ஒன்றுகூடி பணியாற்றுவோம். தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக
நிற்போம். குறுகிய சிந்தனையில் எனக்கு மட்டும் இருந்தால் போதும், நான் செய்த ஒன்றை
ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், அது மிகப் பெரிய தவறு.
மீண்டும் உங்கள் அனைவருக்கும்
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்,
முனியாண்டி ராஜ்.
Subscribe to:
Posts (Atom)