Tuesday, August 30, 2016

TAMILSJKT
வணக்கம். இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சிறந்த அடைவுநிலை பெற வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வலைப்பூங்காவழி, தமிழ்மொழி தொடர்பாக நானும் சிறு பங்களித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என் வலைப்பூவை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1000 பேர் உலா வருகின்றனர். இதிலிருந்து, இவ்வலைப்பூங்கா அவர்களுக்கு எந்த அளவு உதவியிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். என் வலைப்பூவிலிருந்து பெரும்பாலான கோப்புகளை நேரடியாகத் தருவிக்க முடியவில்லையென்றும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கிறது என சிலர் வருத்தம் தெரிவித்தனர். எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு. தமிழ்மொழி திறமிகு ஆசிரியர் என்ற முறையில் கணக்கெடுப்பு எனக்குத் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில் என் வலைப்பூவை மேலும் மெருகேற்ற எண்ணம் கொண்டுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. சரி, தமிழ்மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதாவது இறுதிநேர அறிவுரை....
மாணவர்களே, உங்கள் ஆசிரியர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேளுங்கள். அவர்களைவிட உங்களை அதிகம் தெரிந்தவர்கள் இலர். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.

Monday, August 29, 2016

வாழ்த்துகள்

TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தேர்வு எழுத மாணவர்கள் அனைவரும் தயாராக இருப்பர் என்பது உறுதி.  இது தமிழ்மொழிக்கான தளம் என்பதால் அதைப் பற்றியே பேச விரும்புகிறேன்.
தமிழ்மொழி தாள் 1, தாள் 2 என்று இரண்டு தாள்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.

இத்தளத்தின் வாயிலாக நான் வழங்கிய பயிற்சிகள், வழிகாட்டல்கள் அனைத்தும் உங்களுக்குப் பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதஙியாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விடயங்களை உங்கள் முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.

1. தேர்வை நம்பிக்கையோடு அணுகுங்கள்.
2. கேள்விகளைக் கவனமாகப் படித்து பதில் அளியுங்கள். அவசரம் 
    வேண்டாம்.
3. 

Sunday, May 15, 2016

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தொழிலாய் அறப்பணியாய் ஏற்று, கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்



எங்கள் விரல்கள் பட்ட
களிமண்களும் சிற்பங்களாய்..
எங்கள் வியர்வைகள் உங்களைப்
பலவாறாக வடிவமைத்திருக்கலாம்
மருத்துவராய்.....
வழக்குரைஞர்களாய்..
பொறியியளார்களாய்...
வணிகர்களாய்..
அமைச்சர்களாய்..
எவ்வாறேனும்!

எங்களை நோக்கி வீசப்படும்
வார்த்தைகளில் காயப்பட்டும்
மறுநிமிடங்களில் மீண்டும் மீண்டும்
ஆசிரியர்களாய் ஜனித்து விடுகிறோம்
நான்கு புறங்களிலும் கல்லெறிபடும்
விநோத படைப்புகள் நாங்கள்!
காயப்படுத்தும் எந்தக் கற்களையும்
எங்கள் வகுப்பறை குழந்தைகளைத் தீண்ட
நாங்கள் வழி கொடுப்பதில்லை
உங்கள் தேர்வின் உயர்வுக்குத்
தேய்ந்து தேய்ந்தும் தேயாமலேயே
வளர்கிறோம்..

எங்கள் உலகத்தில்
நாங்கள்தாம் அனைத்துமாய்..
ஆசிரியர் என்ற எங்கள் உலகத்தில்
நாங்கள் நாள்தோறும்
பல அவதாரங்களில்..
மருத்துவர்களாய்..
வழக்கறிஞர்களாய்..
தோட்டக்காரச் செல்வங்களாய்
ஓட்டுநர்களாய்..
பயிற்றுநர்களாய்..
உலகத் தொழில்களில்
ஏதாவது ஒன்றிலுமாய் இருப்பினும்..

நாங்கள் வாழ்வதோ
இன்னொரு பெற்றோராய்
எங்களுக்கான வகுப்பறைகளில் !!!

*முனியாண்டி ராஜ்.*
 

Wednesday, May 4, 2016

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதைப் படியுங்கள்

TAMILSJKT

வணக்கம் நண்பர்களே...

இந்த வலைப்பூவை நான் நடத்துவதற்கும் தாய் மொழி நாளிதழில் வழிகாட்டிக் குறிப்பு எழுதி வருவதற்கும் எந்தவொரு ஆதாயமும் எனக்கில்லை. நான் எந்தப் பள்ளிக்கும் அழைத்து, என்னைப் பட்டறைக்கு அழையுங்கள் என்று கூறியதுமில்லை. நான் பட்டறை செல்லும் இடங்களுக்கு இவ்வளவுதான் கட்டணம் என்று கட்டணம் நிர்ணயம் செய்வதும் இல்லை. இங்கே போடப்படும் பதிவுகளைப் புத்தகம் போட்டு நானும் நிறைய காசு பார்க்கலாம். ஆனால், என் எண்ணம் என்ன .... தமிழுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தன் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கும் சேவை செய்ய வேண்டுமென்பதே. அதற்காக, நிர்வாகத்துறை பதவி உயர்வுகளைக் கூட உதறிவிட்டு, திறமிகு ஆசிரியர் பதவியைத் தேர்ந்தெடுத்தேன். என்னால் இயன்ற வழிகாட்டல்களை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். ஆனால், கொஞ்ச காலமாக என் பெயர் கொஞ்சம் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. என்மேல் அதிக 'அக்கறை' கொண்டவர்கள் சொல்லும் அவதூறுகள்..

அ. இந்த வலைமனை வழி நான் கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறேன்.
      (சரி, சம்பாதிக்கும் வழியாவது சொல்லுங்கள்..கற்றுக் கொள்கிளேன்)
ஆ. தாய் மொழி நாளிதழுக்கு எழுதும் ஒவ்வொரு பகுதிக்கும் கட்டணம் 
       விதிக்கிறேன். (தாய்மொழி இதழையே கேட்டுப் பாருங்கள்)
இ. நான் பட்டறை நடத்தும் இடங்களுக்கு அதிக கட்டணம் கேட்டு கறார்
      செய்கிறேன்.
ஈ. பட்டறையில் பல இரகசியங்களை உடைத்தெறிகிறேன்.
     (என்ன ரகசியம் என்று அடியேன் அறியவில்லை)

இதையெல்லாம் கேட்கும்போது வேதனையே மிஞ்சிகிறது. தன்னால் முடியாத நிலைக்குத் தள்ளப்படும் சில கையாலாகதவர்கள் செய்யும் வேலை இதுவென்று எனக்குத் தெரியும். இவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வெறுப்பாக இருக்கிறது. பழுத்த மரம் தாட் கல்லடி படும் என்பார்கள். அப்படியென்றும் தெரியவில்லை. எனக்கு நெருக்கமானவர்கள், என்னைத் தெரிந்தவர்கள், என்னுடன் இருப்பவர்கள் அல்லது இந்த வலைப்பூவில் உள்ளவற்றைத் 'திருடி' பணம் பார்ப்பவர்கள் செய்யும் வேலை இதுவென்று எனக்குத் தெரியும்.

என்னைப் பட்டறைக்கு அழைக்கும் பள்ளி ஆசிரியர்களிக்கு தெரியும். இக்கட்டான வேளைகளில் கூட அவர்கள் அழைப்புக்கு இணங்கி மாணவர்களுக்கு வழிகாட்டல் வகுப்புகள் நடத்துவது. கட்டணம் பற்றி ஏதாவது அவர்களிடம் வாய் திறப்பேனா என்று கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் இந்த கோமாளி புத்தி. உங்களால் முடிந்தால் இதே போன்று ஒரு வலைப்பூ அமைத்துச் செய்யுங்களேன்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இது தேவையா எனத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு என் வேலையை மட்டும் பார்க்கலாமா... நானும் பணம் பண்ணும் வேலையைச் செய்யலாமா என்று நிதானமாகச் சிந்திக்கிறேன். ஒரு நாளைக்கு 50 மின்னஞ்சல்கள் பெறுகிறேன். இங்குள்ளவற்றைப் பதிவிறக்கும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறுந்தகவல்கள், புலனச் செய்திகள், தொலைவரி செய்திகள் என்று பலர் அழைத்து விளக்கம் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதிலும் அளித்து வந்திருக்கிறேன்.
இவை எனக்குத் தேவையா என்று மேற்சொன்ன அவதூறுகள் என்ன நிறுத்தி வைத்திருக்கின்றன.

நன்றி.

குறிப்பு :
சிறுகதை விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும் போது, உயர்பதவியில் இருக்கும் நண்பர் ஒருவர் அழைத்து தான் கேள்விப்பட்டவற்றைக் கூறியதால் எழுந்த கோபம் இது. சிறுகதையை முதல் பகுதி என்றும் தொடரும் என்றும் நிறுத்தி வைப்பதற்கு அதுதான் காரணம். எழுதும் 'மூட்' போய்விட்டது.

Thursday, April 28, 2016

தமிழ் மொழி தொலைவரி குழுமம்

TAMILSJKT

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு தொலைவரி (TELEGRAM) குழுமம்

இன்றே இணையுங்கள்..

உங்கள் படைப்புகளையும் பகிருங்கள்... நன்றி.

https://telegram.me/joinchat/Al_OoT4NOCIvowR_zAZHyg

telegram for tamil school teachers...

plese click to ...

Friday, April 22, 2016

தமிழ் சொற்களஞ்சியம்

TAMILSJKT
வணக்கம் நண்பர்களே.. இவ்வாரம் தொடங்கி தமிழ் சொற்களஞ்சியம் என்ற புதிய பகுதியைத் தொடங்கவுள்ளேன். இங்கே கொடுக்கும் சொற்களில் ஐயம் இருப்பின் தொடர்பு கொள்க. சொற்களஞ்சியம் தவிர்த்து, இலக்கண விளக்கங்களும் இங்கே இடம் பெறும்.

மூலம். : காப்பியத்தமிழ்
நன்றி. : ஆசிரியர்  சு.செ.திருவருள்

Upload-பதிவேற்றம்
Download-பதிவிறக்கம்
Update-இற்றைப்படுத்துதல்

புணர்ச்சி...

புணர்+சி=புணர்ச்சி
உணர்+சி=உணர்ச்சி

மகிழ்+சி=மகிழ்ச்சி
நிகழ்+சி=நிகழ்ச்சி

நிகழ்+வு=நிகழ்வு
வாழ்+வு=வாழ்வு

கட+உள்=கடவுள்

அருமை+வினை=அருவினை

கருமை+விழி=கருவிழி

நெடுமை+புனல்=நெடும்புனல்

பைம்மை+கூழ்=பைங்கூழ்
(குறள் 550)

Grade-தரநிலை
Curriculum-கலைத்திட்டம்
Design-வடிவமைப்பு
Essay-கட்டுரை

Explicit-தெரிநிலை
Implicit-புதைநிலை

Factor-கரணியம் (காரணம்)
Fluent-சரளம்
Holistic-முழுநோக்கு
Idea-ஏடல் (தன் கருத்து)

Points system-புள்ளிமைத்திட்டம்

Aptitude test-நாட்டத்தேர்வு
Aspect-கூறு
Assumption-கருதுமை
Band-கட்டு (தேர்வு)
Bias-சார்புமை
Cohort-பயில்குழு
Data-தரவு
Errata-திருத்தப்பட்டி
Key-திறவி
Task-இடுபணி

Human-மாந்தன்
Identity card-அடையாள அட்டை
Incident-நிகழ்வு
Nationality-குடியுரிமை
On duty-பணிநிமித்தம்
Slogan-சொலவகம்

புணர்ச்சி...

நறுமை+மலர்=நறுமலர்

நறுமை+முகை=நறுமுகை

நறுமை+மணம்=நறுமணம்

பைம்மை+தொடி=பைந்தொடி

காமம்+நோய்=காமநோய்
நன்னூல்...

பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.

பூச்செடி, பூஞ்செடி,

பூத்தோட்டம், பூந்தோட்டம்


நாண்+உம்=நாணும்

•உயிர்(பிராணன்) உள்ள
 அஃறிணை அனைத்தும்
 உயிரி(பிராணி).

•விலங்கு என்றால்
 குறுக்கே வளர்வன
 (மிருகம்) என்று பொருள்.

• முட்டையிலிருந்து
   வருவன -குஞ்சு.
   முழுஉடலுடன்
   நேரடியாய்ப் பிறப்பன -
   குட்டி (ஆங்.Kid)

சொல் வேறுபாடு
~~~~~~~~~~~~
சொற்களைப் பொருளறிந்து பயன்படுத்தல் வேண்டும்.
௧) அரிவாள்/அறுவாள்:
     பொருள்களைச் சிறி
     தாய் அறியும் வாள்
அரிவாள்(அரிவாள்மணை)
    பொருள்களை அறுக்கும்
    வாள் அறுவாள்.
   (வெட்டறுவாள்)
௨)அரை/அற:
   அரைப்படித்தவன் –
        குறைவாகக் கற்றவன்.
   அறப்படித்தவன் –
         முற்றக்கற்றவன்
௩)அல்ல/இல்லை:
     ஒன்று இன்னொன்று
     அல்லாமையைக்
     குறிப்பது அல்ல.
அன்று(ஒருமை)
அல்ல(பன்மை)
எ-டு: அதுபொதுவழிஅன்று.
அவைபொதுவழிகள்அல்ல.
     ஒன்று ஓரிடத்தில்
     இன்மையைக் குறிப்பது
     இல்லை
எ-டு:அவன்இங்கேஇல்லை.
௪)பண்டிகை/ திருவிழா:
    பண்டிகை – வீட்டில்
         கொண்டாடப்படுவது.
    திருவிழா – வெளியில்
         கொண்டாடப்படுவது.
(பாவாணர்க்கும்
 தமிழநம்பிக்கும் நன்றி)

கடுமை+புனல்=கடும்புனல்



மன்+உயிர்=மன்னுயிர்

௫)தேர்ந்தெடு/ தெரிந்தெடு
     தேர்ந்தெடு – (ஆங்.)
           examine and select.
    தெரிந்தெடு – (ஆங்.)
           select, elect.
௬) வருமானம்/வரும்படி :
      வருமானம் - (ஆங்.)
            proper income
      வரும்படி - (ஆங்.)
           additional income
௭)பருமை/பெருமை:
      பருமை - (ஆங்.) bulk.
      பெருமை - (ஆங்.)
         greatness, dignity, pride,
         excess, increase.
௮)புறக்கடை/புழைக்கடை:
        புறக்கடை - (ஆங்.)
                backyard.
       புழைக்கடை - (ஆங்.)
               narrow passage.
௯)விவரி/விரி:
      விவரி - (ஆங்.) give the
              details of.
      விரி - (ஆங்.) expand.
௧௰)வழக்கம்/ பழக்கம்:
      வழக்கம் - (ஆங்.) habit,
           custom.
      பழக்கம் - (ஆங்.)
         practice,  acquaintance.
௧௧) நிறுத்து/நிறுவு:
         நிறுத்து - (ஆங்.)
             stop, post,
             make anything stand.
         நிறுவு - (ஆங்.)
             establish.
௧௨) கருப்பு/கறுப்பு:
         கருப்பு - (ஆங்.)
             blackness.
         கறுப்பு - (ஆங்.) rage,
            darkening of the face
            through anger.
௧௩)கட்டிடம்/கட்டடம்:
        கட்டிடம் – (ஆங்.) site.
        கட்டடம் – (ஆங்கிலம்)
            building, binding
----------------------------------------------







Thursday, April 21, 2016

கட்டுரை வழிகாட்டி

TAMILSJKT
வணக்கம் நண்பர்களே...
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாய்மொழி நாளிதழில் நான் எழுதிவரும் தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டியைப் பார்த்திருப்பீர்கள். அதில், ஏதேனும், குறை இருப்பின் என் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். மாணவர்களுக்குச் செல்லும் இதில் தவறு ஏதும் இருந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் எனக்குத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
கண்டிப்பாக இதற்கு யாரும் கருத்துத் தெரிவிக்க மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதும்.
நிற்க,

இவ்வாரம் தொடங்கி என் வலைப்பூவில்  யு.பி.எஸ்.ஆர்., கட்டுரை வழிகாட்டி எழுதவுள்ளேன். வழக்கம் போலவே பதிவிறக்கம் தடை செய்யப்பட்டு அனுமதி கோரப்படும். ஆனால், இத்தடவை நீங்கள் பகிர்வு செய்யும் படைப்புகளை வைத்தே தரவிறக்க அனுமதியை வழங்கவுள்ளேன். பல தடவை கூறியும் 100 க்கு 98 % ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்வதில்லை. தேசியப் பள்ளிகளையும் சீனப்பள்ளிகளையும் பாருங்கள். தினமும் பயிற்றிகள், பயிற்சிகள் போன்றவற்றைப் பதிவிடுகிறார்கள்; பகிர்கிறார்கள். அனைவரும் நன்மைபெற வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த எண்ணம் நமக்கு வர இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை தமிழ்ப்பள்ளிகள் இருந்தால்....

நன்றி.