Friday, August 21, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (22.8.2015, வெள்ளிக்கிழமை) நண்பர் ஜோன் போஸ்கோ அவரின் காஜாங் தமிழ்ப்பள்ளி  6 ஆம்  மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. FOKUS UPSR 2015, யு.பி.எஸ்.ஆர்,, தேர்வுக்களம் 2015 எனும் அடிப்படையில் நடத்தனேன். மாணவர்களுகளின் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. மாணவரகளின் ஆர்வமும் ஈடுபாடும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. மாலை 2.00 முதல் 5.00 வரை இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் மாதிரி வாக்கியங்கள், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு போன்றவற்றை எழுதிக் காண்பித்தனர்.




Thursday, August 20, 2015

ஓர் இனிய மாலைப்பொழுது

இன்று மாலை, என் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்களம் 2015 (FOKUS UPSR 2015, BAHASA TAMIL) தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றனை நடத்தினேன். வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல் தொடர்பான பட்டறையே நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மாதிரி வாக்கியங்கள் அமைத்தல், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது பாகம் 2, கட்டுரை எழுதுதல் பட்டறை அடுத்த வாரம் நடைபெறும்.






Sunday, August 16, 2015

யு.பி.எஸ்.ஆர்.,வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (14.8.2015, வெள்ளிக்கிழமை) கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில், தம்பின் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ் மொழி வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவ்ரகளுக்குத் தெளிவான விளக்கங்களும் விடையளிக்கும் நுட்பங்களும் விளக்கப்பட்டன. ஏறக்குறைய 70 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.



கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பட்டறையில்
 கலந்து கொண்ட மாணவர்கள்


சனிக்கிழமை 15.8.2015, சனிக்கிழமையன்று பகாவ், ஆயார் ஈத்தாம் தமிழ்ப்பள்ளியில் அவ்வட்டாரத்தைச் சார்ந்த 4 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பட்டறையை என் முன்னாள் மாணவர், திரு.பிரபுசங்கர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் அன்பு நண்பர் திரு.சந்திரன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் மிகத் தெளிவான விளக்கம் பெற்றதாக கூறினர்.




பகாவ் ஆயர் ஈத்தாமில் நடைபெற்ற பட்டறையில் கலந்து
கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினர்.

Sunday, August 9, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை

இன்று (9.9.2015) பத்து காஜா, பேரா வட்டாரத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தினேன். 3 பள்ளிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 100 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். இப்பயிற்சிப் பட்டறை ASTRO TUTOR ஆல் நடத்தப்பட்டது.




Saturday, August 8, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

நேற்று (7.8.2015 ) சீ போர்ட் தமிழ்ப்பள்ளியில் யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. ஏறக்குறைய 30 மாணவர்கள் இப்பட்டறையில் ஆர்வமுடனும் துடிப்புனும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் தரப்பட்டது. ஆசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களுக்கு நன்றி. இப்பட்டறை கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும்.





இன்று (8.8.2015) காலை டெங்கில் தமிழ்ப்பள்ளியிலும் மாலை ASTRO TUTOR ஆதரவில் உலு சிலாங்கூர் மாணவர்களுக்கான பட்டறை AKADEMI BOMBA நடைபெற்றது. டெங்கிலில் நடந்த பட்டறையில் 50 மாணவர்களும் கோலகுபு பாருவில் நடைபெற்ற பட்டறையில் 150 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

டெங்கில் தமிழ்ப்பள்ளி



உலுசிலாங்கூர் மாவட்டம் (AKADEMI BOMBA KUALA KUBU BARU) ANJURAN ASTRO TUTOR





Sunday, August 2, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 6 தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு இன்று (2.8.2015 ) காலை துன் சம்பந்தன் பள்ளியில் யு.பி.எஸ்.ஆர்,, வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஏறக்குறைய 150 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.



இன்று மாலை (2.8.2015), சிரம்பான் மாவட்டத்தின் 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. ASTRO TUTOR க ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஏறக்குறைய 200 ம1ணவர்கள் கலந்து கொண்டனர்.