Friday, December 25, 2015

KBAT ........அப்படின்னா....????

TAMILSJKT



KBAT (உயர்நிலை சிந்தனைத் திறன்) என்றால் என்ன ….
சில வாரங்களுக்கு முன் புத்ரா ஜெயாவைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரியுடன்(மலாய்க்கார நண்பர்) மாலை நேர காப்பிக்கு நேரம் இருந்தது. பல விடயங்களைப் பேசிக் கொண்டு வந்த எங்கள் பேச்சு KBAT என்று சொல்லக்கூடிய உயர்நிலை அல்லது மேனிலைச் சிந்தனை பக்கம் திரும்பியது. அப்போது அவர்,

அது அப்படி ஒன்றும் பயப்படக்கூடியது அல்ல….KBAT என்றால் என்ன ?

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்கு அந்தேரத்தில் தன் சிந்தனை அல்லது அறிவைப் பயன்படுத்தி தீர்வு காணுதலே உயர்நிலை சிந்தனைத் திறன்(KBAT)  என்றார்.
அதற்கு ஒரு கதையும் சொன்னார்.

ஒரு பொறியியல் பட்டதாரி. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். நிறைய வெளிநாடுகளுக்கும் உள்நாடுகளுக்கும் பயிற்சிகள், கருத்தரங்குகள் வழங்குபவர். அன்று ஒரு முக்கியக் கருத்தரங்கு. அவர்தான் சிறப்புப் பேச்சாளர். தன்னுடைய பி.எம்.டபள்யூ. காரை எடுத்துக் கொண்டு காலையிலேயே புறப்பட்டவர் பெட்ரோல் அளவைப் பார்க்கவில்லை.(நிறைய படித்தவரல்லவா…)

சற்று தூரம் சென்றவர்க்கு வாகனத்தின் சமிக்ஞை இன்னும் 10 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடியும் என்று அச்சுறுத்தியது. பெட்ரோல் நிலையம் ஏதும் அருகில் இருக்கிறதா என்று துணைக்கோள வழிகாட்டியில் சோதித்தார். 12 கிலோ மீட்டர் என்று காட்டியது. அப்படின்னா..என்று சிந்திப்பதற்குள் வாகனமும் நின்றது. ஒருகணம் நிலைகுத்திப் போனார். எப்படி…. சிறப்புப் பேச்சாளர் ஆயிற்றே…

அந்நேரம் ஒரு முதியவர் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை இவரும் நிறுத்தினார்.

“சரி, நான் போய் மிதிவண்டியில் வாங்கி வருகிறேன்…பணம் தாருங்கள் ” என்றார். நம்மாளும் ஒரு 50 ரிங்கிட்டை அவரிடம் நீட்ட, ஐயாவும் கிளம்பி விட்டார். பிறகுதான் இவருக்கு சந்தேகம் தலைதூக்கத் தொடங்கியது. அவர் வரலன்னா..ஏமாத்தி ஓடிட்டாருன்னா..என பல்வேறு சிந்தனைகள்…

சற்று நேரத்தில் ஐயாவும் பெட்ரோலை ஒரு பெரிய புட்டியில் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

சரி… இப்போதுதான் நீங்கள் கேட்ட KBAT ஆரம்பிக்கிறது..
எப்படி ஊற்றுவது…அப்படியே கண்டிப்பாய் ஊற்ற முடியாது…சுற்றும் முற்றும் நடந்தார். அவரின் தவிப்பைப் பார்த்த முதியவருக்கு நிலைமை புரிந்தது. அருகில் இருந்த ஒரு கனிமநீர் புட்டியை(mineral water bottle) எடுத்தார். அதை அருகிலிருந்த ஒரு பாறையில் வைத்து அடிபாகத்தை வெட்டினார். புனல் தயாரானது. இனி தீர்வு தானே…..

அந்த தேரத்தில் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாரே… அதுதான் உயர்நிலைச் சிந்தனை(KBAT) என்றார்.

என்னதான் பொறியியல் படித்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் சிக்கலுக்கு அவரால் ஒரு தீர்வைக் காணமுடியவில்லை. படிக்காத ஒரு முதியவர் தீர்வு கண்டார்.
சரி, நமது விடயத்துக்கு வருவோம்…
வகுப்பறையில் மந்தமான மாணவன் என ஒதுக்கப்படும் ஒரு மாணவனும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். எனவே, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்…

எ.கா.: வெள்ளப் பேரிடர்

இ ) வெள்ளப் பேரிடர்களை தவிர்ப்பதற்கு நீ என்ன செய்வாய் ?
       என்று கேட்கப்பட்டால் அதற்கு அவர் கூறும் பதில்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..தவறு 
      இருந்தால் கொஞ்சம்   சுட்டிக்காட்டி திருத்துங்கள்…

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு வாசிப்பு. வாசிப்பை மாணவரிடம் வலியுறுத்துங்கள்.. ஏனெனில், அவன் சிந்திக்க முடியும்.. ஆனால், அதை எழுத வேண்டுமல்லவா..



Tuesday, December 22, 2015

TAMILS

பதிவுகள்

TAMILSJKT

வணக்கம். அண்மைய காலமாக இங்குப் பதியப்படும் சில பதிவுகள் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் என்னிடம் மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டனர். ஒருசில காரணங்களுக்காக அவை முடக்கப்பட்டு இருக்கின்றன.(வணிக நோக்கத்திற்கு இது சென்று விடாமல், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இலவசமாக இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதில் ஒன்று).
எனினும் இவற்றைப் பார்வையிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவற்றைத் தரவிறக்கத்திற்குத் திறந்துவிடப் பட்டதை ஆசிரியர்கள் உணர்வீர்கள். இங்குப் பதியப்படும் சில படைப்புகள் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,

1. ஆசிரியை திருமதி லலிதா செங்கனி 
2. ஆசிரியர் திரு.விக்ரம் சயாராமா 
3. ஆசிரியை திருமதி மாரியம்மா மும்மூர்த்தி

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு வேண்டியவை மட்டும் 'உருவிக்கொண்டு' பகிரும் பெரிய மனம் கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது வேதனை. நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் அது தமிழாசிரியர்கள் அனைவருக்கும் பயனாக அமையும்.

*** குறிப்பு
உங்களால் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என்றால், மின்னஞசல் வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

நாம் பொய், நம் சேவையே மெய்

Wednesday, December 16, 2015

TAMILSJKT

அனைவருக்கும் வணக்கம்.
நான் இங்குப் பதியும் ஆண்டு பாடத்திட்டங்கள், செய்யுளும் மொழியணியும் குறிப்புகள், வினாத்தாள்கள் ( அடுத்த பதிவுகளில் இடம் பெறும்) யாவும் என் தனி மனித உழைப்பன்று. இது  ஆசிரியர்கள் பலரின் உழைப்பு. ஆசிரியர்கள் சிலர் எனக்கு நேரடியாக மின்னஞ்சல் செய்து, அனைவருக்கும் பயன்படும்படி வலைப்பூங்காவில் பதிவு செய்யக் கூறுகிறார்கள். சிலவற்றை நான் மற்ற இடங்களில் இருந்து அனுமதியோடு எடுத்துப் பதிவிடுகிறேன். எனவே, சில சமயங்களில் அவற்றில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் காணப்படுவதுண்டு. அவற்றை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். சற்று முன்பு ஓர் ஆசிரியை 'ஆத்திச்சூடியில்' 'ச்' வராது என்று கூறினார். ஆம், வராது. உடனே திருத்தி விட்டேன். இந்த வலைப்பூங்கா அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆசிரியர்களாகிய நீங்களும் உங்களிடம் உள்ள ஆண்டு பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், திருத்தங்களுடன் அவை இந்த வலைப்பூங்காவில் பதிவேற்றப்படும். 
muni2622@gmail.com

இங்கு நான் பதிவிட்டிருக்கும் UPSR பயிற்சிகள் யாவும் என் உழைப்பிலும் சிந்தனையிலும் உருவானவை. அவற்றைப் பற்றியும் தாங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

இனிவரும் காலங்களில் உங்களிடம் இருந்து பல தரவுகளை எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி வேலை செய்தால் பளு தெரியாது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த வலைப்பூங்காவின் வழி, ஒன்றிணைய வேண்டும். நன்றி.

Monday, November 30, 2015

TAMILSJKT
வணக்கம். அண்மையில் ஒருவர் கேட்டார். 'நீங்கள் இங்குப் பதியும் மாதிரி வினாக்கள், பயிற்சிகள் போன்றவை அருமையாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிலும் உங்கள் வலைமனை பக்கத்தைப் போட்டு விடுகிறீர்கள். அதனால் மாணவர்களுக்குப் படி (photastat) எடுத்துக் கொடுக்க சிரமமாக இருக்கிறது,'' என்று !
என்ன சொல்ல...இங்குப் பதியப்படுபவற்றைப் பலர் பார்வையிட்டுத் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். நன்று. அதற்காகத்தானே பதிகிறேன். பலர் அதற்காக நன்றிகூட கூறுவதில்லை. பரவாயில்லை. சிலரோ இங்குப் பதியப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து, அடியில் என் பெயரை அழித்துவிட்டு, தயாரிப்பு: தங்கள் பெயர் என்றும் போட்டுக் கொள்கிறார்கள். இதை எங்குப் போய் சொல்ல......
இந்த ஆண்டு (2015) யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டத்தை ஒரு பள்ளி (எனக்குத் தெரிந்து) பதிவிறக்கம் செய்து, அதைச் செய்தது அந்தப் பள்ளியின் தமிழ் மொழி பாடப் பணித்தியக் குழு என்றும், அதன் பதிப்புரிமை தங்களுக்கே என்றும் முகப்பட்டையில் போட்டுக் கொண்டனர். அதை ஓர் அழகான புத்தகமாகவும் செய்து கொண்டனர்.  அதுவும் ஒரு பெற்றோர் மூலமாக என்னடமே வந்தது..பாருங்கள் சார்... அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு அருமையாக செய்திருக்கிறார்கள்..என்றும் கூறினார்.... இப்போது சொல்லுங்கள்....என் பெயரையும் என் வலைமனை பெயரையும் போடுவது தவறா?'' என்று கேட்டேன். அவர் ஒன்றும் பேசவில்லை. நீங்களாவது பேசுங்களேன்..

Wednesday, November 18, 2015

ஒரு கணம் .................







யு.பி.எஸ்.ஆர்., தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். அதே சமயம். 6 A, 5 A, 4 A மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் நாம் மறக்கலாகாது. இள வயது மாணவர்கள். அவர்களையும் பாராட்டிப் போற்ற வேண்டும். அவர்களின் உண்மையான கல்விப் பயணத் தொடக்கம் இனிமேல்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். கல்வியின் மேல் அவர்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும் நிலைக்கு நாம் அவர்களைத் தள்ளக் கூடாது. புகைப்படங்கள், பத்திரிக்கைகள் என அவர்களுக்கும் நாம் இடம் தர வேண்டும்,

நிற்க...
யு.பி.எஸ்.ஆர்., தமிழ் மொழித் தாளில் குறிப்பாக தாள் 2 இல் பெரும்பான்மையான மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நான் பயிற்சிப் பட்டறைக்குச் சென்ற பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பலர் அழைத்து நன்றி தெரிவித்தனர். அவர்களின் பள்ளியில் தமிழ் மொழியின் தேர்ச்சி விகிதம் நல்ல உயர்வு கண்டிருப்பதாகவும் அதிகமான மாணவர்கள் 'A' பெற்றிருப்பதாகவும் கூறினர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

மேலும் பலர், என்னுடைய இந்த அகப்பக்கம் மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மிக்க மகிழ்ச்சி. 

என் பணி தொடரும். இந்த அகப்பக்கம் வழி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என்னால் முடிந்த அளவு வழிகாட்டியாய் இருப்பேன். என் பணிமனைகளைத் தொடர்ந்து நடத்துவேன். 

நன்றி.

Monday, October 26, 2015

என்னுடன் சில நொடிகள்.....

TAMILSJKT
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் அறிந்து, அனைத்தும் கொண்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு வலைமனை இருப்பதாக அறியவில்லை. எனவே, இந்த வலைமனையை மேலும் மெருகுபடுத்த உங்கள் ஆலோசனையும் வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. இந்த வலைமனையில் இன்னும் எவற்றைப் புகுத்தலாம் என நீங்கள்தாம் கூற வேண்டும்.
இப்பக்கத்தை 20,000 மேற்பட்டோர் வலம் வந்திருக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததாகத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் வருந்தவுமில்லை. இந்த வலைமனையைப் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால், அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். தங்களிடமிருந்து ஆரோக்கியமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.

அன்புடன்,
முனியாண்டி ராஜ்.

Tuesday, October 20, 2015

தமிழ் மொழி 036 மற்றும் 037 க்கான வழிகாட்டி இங்கே BAHASA TAMIL 2016  என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அடுத்தாண்டு தேர்வுக்கான தமிழ் மொழி தாள் எவ்வாறு அமையுமென இதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.  இக்குறிப்பைப் பற்றி ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
TAMILSJKT

Sunday, October 11, 2015

யு.பி.எஸ்.ஆர்., புதிய வடிவமைப்புப் பற்றிய விவரங்களை விரைவில் இனிமேல் பதிவு செய்வேன். அண்மையில், புதிய வடிவத்திற்கான தலைமைப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளுக்கும் சென்று வந்தேன். இன்னும், மாநில மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. அதன்பின், அது தொடர்பான விளக்கங்களையும் மாதிரித் தாள்களையும் இங்கே பதிவேற்றுவேன். 

Sunday, August 30, 2015

தமிழ் மொழி தேர்வுக்களம் 2015 பட்டறை

இன்று, 30.8.2015 (ஞாயிறு) பெட்டாலிங் வட்டார (champions proggramme) தமிழ்ப்பள்ளிகளுக்கான தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பட்டறையை வழி நடத்தினேன். ஏறக்குறைய 100 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி இலாகா ஏற்பாடு செய்திருந்த இப்பட்டறையில் தேர்வுத்தாளை அணுகும் வழிமுறைகள், மாணவர்கள் செய்யும் தவறுகள், சிறந்த கதை, சிறுகதைக்கான கூறுகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டன. நினைவுக்காக ............




Friday, August 28, 2015

யு.பி.எஸ்.ஆர்., தேர்வுக்களம் 2015 - தமிழ் மொழி தாள் 2

இன்று 28.8.2015(வெள்ளி) மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை, என் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி தாள், பகுதி 2 (கட்டுரைகள் மட்டும்) தேர்வு வழிகாட்டி வகுப்பை நடத்தினேன். கட்டுரைத் தாளுக்கான விடையளிக்கும் முறை, மாணவர்கள் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான குவிவு போன்றவை ஆழமாக விளக்கப்பட்டன. மாணவர்களும் மாதிர் முன்னுரைகள், முடிவுரைகள் எழுதுதல், கருத்து விரிவாக்கம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, தமிழ் மொழி எழுத்துக்கான இவ்வாண்டின் கடைசி பட்டறை (என் பள்ளியில்) ஆகும்.  நினைவுக்காக சில நிழற்படங்கள்....






FOKUS UPSR BAHASA TAMIL 2015

இன்று என் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுக் களம் 2015 இன் இறுதி பட்டறை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 வரை நடைபெற்ற இந்தப் பட்டறையில் ஏறக்குறைய 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக் கேள்விகளை அணுகும் முறைகள், முக்கியத் தலைப்புகள் ஆகியவை விரிவாக அலசப்பட்டன. ஆசிரியர்கள் பலரை இப்பட்டறையைச் சிறப்பாக நடத்த கைகொடுத்தனர்.
இர

Saturday, August 22, 2015

தேர்வுக் களம் வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று 22.8.2015 (சனிக்கிழமை) போர்ட் டிக்சன் தமிழ்ப்பள்ளியில் FOKUS UPSR தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பயிலரங்கை நடத்தினேன். மாணவர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதம். ஏறக்குறைய 80 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில், மாணவரகள் தேர்வில் செய்யும் தவறுகள், அதைக் களையும் வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டன. ஏற்கனவே, அந்தப் பள்ளிக்குப் போயிருந்தாலும் இன்றைய பட்டறை மிகவும் வித்தியாசமானதாக இருந்ததாக பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கூறினர். நினைவுக்காக அவர்களுடன் எடுத்துக் கொண்ட சில படங்கள்...



Friday, August 21, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (22.8.2015, வெள்ளிக்கிழமை) நண்பர் ஜோன் போஸ்கோ அவரின் காஜாங் தமிழ்ப்பள்ளி  6 ஆம்  மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. FOKUS UPSR 2015, யு.பி.எஸ்.ஆர்,, தேர்வுக்களம் 2015 எனும் அடிப்படையில் நடத்தனேன். மாணவர்களுகளின் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. மாணவரகளின் ஆர்வமும் ஈடுபாடும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. மாலை 2.00 முதல் 5.00 வரை இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் மாதிரி வாக்கியங்கள், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு போன்றவற்றை எழுதிக் காண்பித்தனர்.




Thursday, August 20, 2015

ஓர் இனிய மாலைப்பொழுது

இன்று மாலை, என் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்களம் 2015 (FOKUS UPSR 2015, BAHASA TAMIL) தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றனை நடத்தினேன். வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல் தொடர்பான பட்டறையே நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மாதிரி வாக்கியங்கள் அமைத்தல், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது பாகம் 2, கட்டுரை எழுதுதல் பட்டறை அடுத்த வாரம் நடைபெறும்.






Sunday, August 16, 2015

யு.பி.எஸ்.ஆர்.,வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (14.8.2015, வெள்ளிக்கிழமை) கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில், தம்பின் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ் மொழி வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவ்ரகளுக்குத் தெளிவான விளக்கங்களும் விடையளிக்கும் நுட்பங்களும் விளக்கப்பட்டன. ஏறக்குறைய 70 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.



கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பட்டறையில்
 கலந்து கொண்ட மாணவர்கள்


சனிக்கிழமை 15.8.2015, சனிக்கிழமையன்று பகாவ், ஆயார் ஈத்தாம் தமிழ்ப்பள்ளியில் அவ்வட்டாரத்தைச் சார்ந்த 4 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பட்டறையை என் முன்னாள் மாணவர், திரு.பிரபுசங்கர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் அன்பு நண்பர் திரு.சந்திரன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் மிகத் தெளிவான விளக்கம் பெற்றதாக கூறினர்.




பகாவ் ஆயர் ஈத்தாமில் நடைபெற்ற பட்டறையில் கலந்து
கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினர்.

Sunday, August 9, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை

இன்று (9.9.2015) பத்து காஜா, பேரா வட்டாரத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தினேன். 3 பள்ளிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 100 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். இப்பயிற்சிப் பட்டறை ASTRO TUTOR ஆல் நடத்தப்பட்டது.




Saturday, August 8, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

நேற்று (7.8.2015 ) சீ போர்ட் தமிழ்ப்பள்ளியில் யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. ஏறக்குறைய 30 மாணவர்கள் இப்பட்டறையில் ஆர்வமுடனும் துடிப்புனும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் தரப்பட்டது. ஆசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களுக்கு நன்றி. இப்பட்டறை கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும்.





இன்று (8.8.2015) காலை டெங்கில் தமிழ்ப்பள்ளியிலும் மாலை ASTRO TUTOR ஆதரவில் உலு சிலாங்கூர் மாணவர்களுக்கான பட்டறை AKADEMI BOMBA நடைபெற்றது. டெங்கிலில் நடந்த பட்டறையில் 50 மாணவர்களும் கோலகுபு பாருவில் நடைபெற்ற பட்டறையில் 150 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

டெங்கில் தமிழ்ப்பள்ளி



உலுசிலாங்கூர் மாவட்டம் (AKADEMI BOMBA KUALA KUBU BARU) ANJURAN ASTRO TUTOR